இது மட்டும் உறுதி செய்யப்பட்டால்... லண்டனில் மீண்டும் ஊரடங்கு வரலாம்! எச்சரிக்கை தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

கொரோனா வைரஸ் சமூகத்தில் பரவுவது உறுதி செய்யப்பட்டால், பிரித்தானியாவில், லீஸ்டரில் போலவே நகர அளவிலான ஊரடங்கில் லண்டனைக் காணலாம் என்று நிபுணர் ஒருவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இருப்பினும் நாட்டில் தற்போது அத்தியாவசிய தேவைகளுக்காக அவ்வப்போது சில தளர்வுகள் கொண்டு வரப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களில் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் 10 சதவிகிதம் Leicester நகரில் இருந்து வந்துள்ளதால், இங்கு ஊரடங்கு உத்தரவு அமுல் படுத்தப்பட்டுள்ளது.

அதே போன்று நாட்டின் 36 இடங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால், பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், லீஸ்டரில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூகங்களுக்குள் கொரோனா வைரஸ் திரும்பினால் நகர அளவிலான ஊரடங்கில் லண்டனைக் காணலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

Strathclyde பல்கலைக்கழகத்தின் கணிதம் மற்றும் புள்ளிவிவர பேராசிரியர் Adam Kleczkowski இங்கிலாந்தின் முக்கிய நகரங்களில் கொரோனா வைரஸ் உள்ளூர்மயமாக்கப்பட்ட ஊரடங்கைக் காணலாம் என்று எச்சரித்துள்ளார்.

பிபிசி ரேடியோ 5 லைவ் உடன் பேசிய பேராசிரியர் Adam Kleczkowski, லீஸ்டர் ஊரடங்கு என்பது அரசாங்கம் எடுக்க வேண்டிய சரியான நடவடிக்கை என்று வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸ் பரவல் அதிகமானால் அரசாங்கம் பெரிய நகரங்களில் ஊரடங்கை செயல்படுத்தக்கூடும் என்று தெரிவித்துள்ளார்.

வைரஸை நன்கு கையாண்ட நாடுகளிலே மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், உள்ளூர்மயமாக்கப்பட்ட ஊரடங்கு, அதாவது Local Lockdown இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவின் புதிய பாதிப்புகள், நாட்டின் பெரிய பகுதிகளில் ஊரடங்கை ஏற்படுத்துமா? லண்டனில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? எப்படி செயல்படும் என்று அவரிடம் கேட்ட போது,

பிரித்தானியா தற்போது ஒரு நாடு தழுவிய ஊரடங்கில் இருந்து வெளிவந்துள்ளது. எனவே நகரத்தை அடிப்படையாகக் கொண்ட ஊரடங்கு சாத்தியமாகும்.

முழு நாட்டையும் ஒரு பெரிய ஊரடங்கில் இருந்து வெளியேற்றியுள்ளதால், நகரங்களில் ஊரடங்கு செய்யக்கூடிய ஒன்றாக இருக்கும்.

மேலும், அவர் ஜெர்மனி, தென் கொரியா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகள் கொரோனா வைரஸை சிறப்பாக கையாண்டும், அங்கு மீண்டும் கொரோனாவின் பாதிப்பை பார்க்க முடிந்தது. இதன் காரணமாக அங்கு உள்ளூர் ஊரடங்கு நடவடிக்கை பயன்படுத்தப்பட்டன.

அது, பெரிய நகரங்களிலும் ஏற்பட்டால் இது நடக்கக்கூடும் என்று நான் நினைப்பதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்