பிரித்தானிய இளம்பெண்னுடன் ஆபாச சேட்: மொத்தமாக 125,000 பவுண்டுகள் தொகையை இழந்த அமெரிக்க தந்தை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

அமெரிக்க தொழிலதிபர் ஆபாச இனைய பக்கத்தின் ஊடாக பிரித்தானிய இளம்பெண்ணால் மிரட்டலுக்கு இலக்காகி சுமார் 125,000 பவுண்டுகள் தொகையை இழந்துள்ள சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பிரித்தானியாவில் தொழில் நிமித்தம் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த அமெரிக்க தொழிலதிபர் ஆபாச இணைய பக்கத்தில் தனக்கான தேவையை பூர்த்தி செய்துகொள்ள பதிவு செய்துள்ளார்.

அதில் மான்செஸ்டரை சேர்ந்த இளம்பெண் ஒருவரின் தொடர்பு எண் இவருக்கு கிடைத்துள்ளது.

ஆர்வ மிகுதியால் குறித்த நபர் அந்த பெண்ணிடம் WhatsApp மூலம் ஆபாசமாக குறுந்தகவல்களை பகிர்ந்துள்ளார்.

ஆனால் தங்களுக்குள் நடக்கும் இந்த ஆபாச உரையாடல்களை ரகசியமாக வைத்துக் கொள்ள குறித்த இளம்பெண் பணம் தர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தொழிலதிபர் பயம் காரணமாக கடந்த 2019 மே மாதம் முதன் முறையாக குறிப்பிட்ட தொகையை அளித்துள்ளார்.

ஆனால் அதற்கு பின்னரும் தங்களுக்குள் நடந்த உரையாடல்களை மனைவியுடன் பகிர்ந்து கொள்வதாக கூறி மிரட்டி பணம் கேட்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மிரட்டலுக்கு பயந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை அந்த அமெரிக்க தொழிலதிபர் பணம் அளித்து வந்துள்ளார்.

மொத்தமாக 125,000 பவுண்டுகள் இதுவரை அவர் அளித்துள்ளார். இதனிடையே, தனியார் புலன்விசாரணை குழுவிடம் தமது நிலையை கூறி அந்த பெண்ணின் தகவல்களை சேகரிக்கவும் அவர் முயன்றுள்ளார்.

இறுதியில் லண்டன் உயர் நீதிமன்றத்தில் குறித்த பெண்ணுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளார்.

ஜூன் 17 ஆம் திகதி குறித்த மான்செஸ்டர் பெண்ணுக்கு எதிராக துன்புறுத்துதல், தனிப்பட்ட தகவல்களைத் தவறாகப் பயன்படுத்துவதற்கும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்