லண்டனில் இரவு நேரத்தில் தலையில் தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் இருக்கும் நபர்! சிசிடிவி புகைப்படத்துடன் பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் நபர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் இதில் சம்மந்தப்பட்ட இருவரின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Trafalgar Avenueவில் உள்ள பழைய கெண்ட் சாலையில் கடந்த 16ஆம் திகதி இரவு 10.30 மணிக்கு நபர் ஒருவர் தாக்கப்பட்டு உயிருக்கு போராடுவதாக பொலிசாருக்கு தகவல் வந்தது.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் மற்றும் மருத்துவ குழுவினர் 50களில் உள்ள நபர் தலையில் பலத்த காயத்துடன் கிடப்பதை பார்த்து உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பொலிசார் கூறுகையில், சம்பவத்துக்கு முன்னர் அருகில் உள்ள கடையில் இரண்டு நண்பர்களுக்கும், நபர் ஒருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த நபர் கொடூரமாக தாக்கப்பட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இது சம்மந்தமாக இரண்டு பேரின் புகைப்படங்களை தற்போது வெளியிட்டுள்ளோம். அவர்களிடம் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட நபர் தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிந்தால் எங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்