ஹோட்டலில் பெண்ணின் அலறல் சத்தம்... எல்லா இடங்களிலும் ரத்தம்! கத்தி குத்து சம்பவத்தை நேரில் கண்டவர்கள் சொன்ன தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

ஸ்காட்லாந்தில் மர்ம நபர் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தியதால், 3 பேர் பலியாகியிருப்பதாக அஞ்சப்படும் நிலையில், சம்பவத்தை நேரில் கண்டவர் சிலர், உதவிக்காக காயம் பட்டவர்கள் கெஞ்சியதாக கூறியுள்ளனர்.

ஸ்காட்லாந்தின் Glasgow நகரின் West George வீதியில் இருக்கும் Park Inn Hotel ஒன்றில் நுழைந்த மர்ம திடீர் என்று அங்கிருந்தவர்களை நோக்கி கத்தியால் தாக்குதல் நடத்தியதால், சுமார் 3 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 6 பேர் காயமடைந்திருப்பதாகவும், இதில் பொலிசார் சிலரும் காயமடைந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் உயிரிழந்தவர்கள் குறித்து இன்னும் எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.

இந்நிலையில், குறித்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக கூறப்படும் Sean என்பவர் உதவிக்காக பெண் ஒருவர் சத்தம் போடுவதை கேட்க முடிந்ததாகவும், ஹோட்டலின் வரவேற்பு பகுதியில் இரத்தம் இருந்ததை பார்த்ததாக கூறியுள்ளார்.

(Picture: AFP)

தொடர்ந்து அவர் கூறுகையில், பெண் ஒருவர் உரத்த சத்ததுடன் கத்துவதை என்னால் கேட்க முடிந்தது. அதுமட்டுமின்றி நபர் ஒருவர் உதவிக்காக கத்துவதையும் கேட்க முடிந்தது.

ஆனால் என்ன நடக்கிறது என்பதை ஜன்னலில் இருந்து பார்க்க முடியவில்லை.

இருப்பினும், வெளியில் இருக்கும் மக்கள் அங்கே நின்று ஹோட்டலை நோக்கிப் பார்ப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

அதன் பின் மாடிப்படி தளத்திற்கு சென்ற போது, அங்கு எல்லா இடங்களிலும் ரத்தம் காணப்பட்டது,

நுழைவாயிலுக்கு வெளியே செல்வதற்கு முன்பு வரவேற்பறையில் ஒரு நபர் குத்தப்பட்டதைக் கண்டேன், அங்கு மற்றொரு நபர் குத்தப்படுவதைக் கண்டேன் என்று கூறியுள்ளார்.

(Picture: PA)

மற்றொரு ஹோட்டல் விருந்தினர், நிக்கோலஸ்(27) மக்கள் அலறுவதை நான் கேட்டேன். நான் வரவேற்புக்குச் சென்றபோது எல்லா இடங்களிலும் ரத்தம் இருந்தது என்று தெரிவித்துள்ளார்.

சுமார் 20 பொலிஸ் வாகனங்கள் குறித்த இடத்திற்கு அனுப்பப்பட்டன. அதனுடன் மோப்ப நாய்கள், ஆயுதமேந்திய அதிகாரிகள் ஆகியோரும் விரைந்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவல் காரணமாக ஹோட்டல் வணிகத்திற்காக மூடப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஊரடங்கு காலத்தில் புகலிடம் கோருவோர் தங்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

(Picture: PA)

இந்த ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் அலுவலக கட்டிடத்திலிருந்து சம்பவத்தைக் கண்ட கிரேக் மில்ராய் என்பவர், ஆம்புலன்சில் நான்கு பேர் அழைத்துச் செல்லப்பட்டதைக் கண்டேன்.

ஆப்பிரிக்க வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர், காலணிகள் இல்லாமல் தரையில் கிடப்பதை கண்டேன். அவர் புல்லட் காயமோ அல்லது கத்தி குத்து காயத்தாலோ கிழே கிடப்பதை போன்று இருந்தது.

மருத்துவர்களால் அழைத்துச் செல்லப்பட்ட நான்கு பேரில் அவரு, ஒருவர் என்று நான் நம்பினேன்.

அதன் பின் பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்தன, ஆயுதமேந்திய பொலிசார் ஹோட்டலுக்குள் ஓடியதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்