கொரோனாவால் பாதிக்கப்பட்ட கனடிய பிரதமர் மனைவி! உடன் இருந்த பிரபலத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் நிகழ்ச்சியில் கனடிய பிரதமரின் மனைவியுடன் கலந்து கொண்ட பிரித்தானிய பிரபலம் லீவிஸ் ஹாமில்டன் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

லண்டனில் இந்த மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் இட்ரிஸ் எல்பா மற்றும் கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி உள்ளிட்ட பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பிரித்தானியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீரரான லீவிஸ் ஹாமில்டனும் கலந்து கொண்டனர். இந்நிலையில் இட்ரிஸ் எல்பா, சோஃபி ஆகியோருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து அவர்களுடன் விழாவில் பங்கேற்ற லீவிஸ் ஹாமில்டன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இதுதொடர்பாக லீவிஸ் ஹாமில்டன் விடுத்துள்ள அறிக்கையில், நான் உடல் நலத்துடன் இருக்கிறேன் என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் கலந்து கொண்ட லண்டன் நிகழ்ச்சியில் பங்கேற்ற இருவருக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதை தொடர்ந்து எனது உடல் நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன. வைரஸ் தொற்றுக்கான எந்தவித அறிகுறிகளும் என்னிடம் இல்லை. இட்ரிஸ் எல்பா, சோஃபி ஆகியோரை சந்தித்து 17 நாட்கள் ஆகிவிட்டன.

எனக்கு பரிசோதனை செய்ய வேண்டுமா என இருமுறை என் மருத்துவரிடம் கேட்டேன். ஆனால் இங்கு உண்மை நிலை என்னவெனில் குறிப்பிட்ட அளவிலேயே சோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. என்னைவிட அதிகமானோருக்கு பரிசோதனைகள் தேவைப்படுகின்றன என கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்