கொரோனா அப்பாவை இறுதியாக அழைத்து சென்றுவிட்டது! பிரபல நடிகை வெளியிட்ட நெஞ்சை உருக்கும் புகைப்படம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் தன் தந்தையை இழந்த நடிகை ஒருவர், அவர் இறப்பதற்கு முன் எடுத்த புகைப்படத்தை மிகவும் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

பிரித்தானியாவை சேர்ந்தவர் Sophia Myles. இவர் Underworld, Doctor Who, Moonlight போன்ற படங்கள் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.

இதையடுத்து பிரபல நடிகையாக வலம் வந்த இவரின் தந்தை Peter கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.

இதனால் அவர் இது குறித்து தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில், என் அப்பா சில மணி நேரங்களுக்கு முன்பு தான் உயிரிழந்தார். அவரை கொரோனா இறுதியாக அழைத்து சென்றுவிட்டது என்று குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அவர் தன்னுடைய தந்தை இறப்பதற்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

அதில் வெண்டிலேட்டர் உதவியுடன் மருத்துவமனையின் படுக்கையில், Peter படுத்திருக்க, Sophia Myles முகமூடி மற்றும் பாதுகாப்பான் கையுறை அணிந்தபடி தன் அப்பாவின் தலையை வாரி, ஒரு வித ஏக்கத்துடன் பார்ப்பது போன்று உள்ளது.

அதில், அவர் நான் என் தந்தையை பார்ப்பதற்காக சென்றேன், இது கொரோனா வைரஸின் கடுமையான உண்மை இது தான் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் கொரோனா வைரஸின் உண்மை முகத்தை காட்டுகிறது என்று இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.

பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது வரை 5,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 233 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்