பிரித்தானியாவில் புதிதாக பிறந்த பிஞ்சுக்குழந்தைக்கு கொரோனா!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானியாவில் புதிதாக பிறந்த பிஞ்சுக்குழந்தைக்கு கொரோனா நோய்த்தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

லண்டனில் புதிதாகப் பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதன்மூலம் பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான மிகவும் வயது குறைந்த நபராக அந்த குழந்தை அறியப்படுகிறது.

குழந்தையின் தாய் சில நாட்களுக்கு முன்னர் சந்தேகத்திற்குரிய நிமோனியாவுடன், வடக்கு மிடில்செக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

தனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த தாய், நேற்றிரவு குழந்தை பெற்றெடுத்த பின்னரே நோய்க்கான அறிகுறிகளை பற்றி அறிந்ததாக கருதப்படுகிறது.

குழந்தை பிறந்த சில நிமிடங்களில் சோதனை செய்யப்பட்டதாக Sun செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்