லண்டனில் கொரோனாவால் வெறிச்சோடிய மக்கள் கூடும் முக்கிய இடங்கள்! ரத்து செய்யப்பட்ட கொண்டாட்டம்.. புகைப்படங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் எப்போதும் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளால் நிரம்பியிருக்கும் முக்கிய அடையாளங்களை கொண்ட இடங்கள் கொரோனா வைரஸ் பயத்தால் வெறிச்சோடி காணப்படுவது தெரியவந்துள்ளது.

Charing Cross, Trafalgar Square, Euston Underpass போன்ற இடங்கள் எப்போதும் கூட்டத்துடன் இருக்கும்.

ஆனால் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலையில் அந்த இடங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. இது தொடர்பான புகைப்படங்கள் வைரலாகியுள்ளது.

பிரித்தானிய பிரதமர் போரீஸ் ஜான்சன் இன்னும் பல குடும்பங்கள் அவர்கள் காலத்திற்கு முன்பே அன்புக்குரியவர்களை இழக்கப் போகிறார்கள் என கூறிய நிலையில் தற்போது மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

Jeremy Selwyn

பணிக்கு செல்பவர்கள் பலர் அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டிலேயே உள்ளனர்.

லண்டன் போக்குவரத்து கழகமான Transport for Londonக்கு கட்டண வருமானத்தில் £400 மில்லியன் வீழ்ச்சி ஏற்பட்டதாக credit rating agency சார்பில் கடந்த புதன்கிழமை தெரிவிக்கப்பட்டது.

ஜூன் மாதம் இறுதி வரையில் வரும் நான்கு மாதங்களில், பயணிகள் மூலம் வரும் வருமானத்தில் 30 சதவீதம் வீழ்ச்சி ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

பணியாளர்களில் 20 சதவீதம் பேர் வீட்டிலிருந்து வேலை செய்வார்கள் என்றும், ஓய்வு நேரத்தில் மேற்கொள்ளப்படும் பயணங்களும் குறையும் என தெரிகிறது.

Jeremy Selwyn

இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலையில் லண்டனில் செயின்ட் பேட்ரிக் தின அணிவகுப்பு ரத்து செய்யப்பட்டது.

இது தொடர்பாக லண்டன் மேயர் சாதிக் கான் டுவிட்டரில், லண்டனின் செயின்ட் பேட்ரிக் தின கொண்டாட்டங்கள் பலருக்கு வருடாந்திர சிறப்பம்சமாகும், ஆனால் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக அணிவகுப்பு பங்கேற்பாளர்கள் பங்கேற்க முடியாததால் இந்த ஆண்டு நிகழ்வு ரத்து செய்யப்பட வேண்டியதாகிவிட்டது என்பதை ஏமாற்றதுடன் தெரிவித்து கொள்வதாக கூறியிருந்தார்.

பல நிகழ்வுகள் ரத்து செய்யப்படுவது லண்டனில் உள்ள சுற்றுலாத் துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை பிரித்தானியாவில் 590 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு, 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Jeremy Selwyn
Jeremy Selwyn
Jeremy Selwyn
Jeremy Selwyn

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்