கொரோனாவால் உயிரிழந்தவரின் சடலத்தில் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கலாம்! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் உடலில் சில நாட்கள் அந்த வைரஸ் தொடர்ந்து தங்கியிருக்கும் என தெரியவந்துள்ளது.

அயர்லாந்தின் Irish Association of Funeral Directors ஒரு முக்கிய தகவலை இது தொடர்பில் வெளியிட்டுள்ளனர்.

அதில், கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் சடலங்களுக்கு இறுதிச்சடங்கு நடத்தாமல் உடனடியாக புதைத்து விடுங்கள்.

ஏனெனில் உயிரிழந்தவர்களின் சடலங்களில் வைரஸ் உயிர்ப்புடன் அப்படியே சில நாட்கள் இருக்கலாம்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களுக்கு இறுதி சடங்கு ஏற்பாடு செய்யும் போது பின்பற்றப்பட வேண்டிய விடயங்களை எங்கள் உறுப்பினர்களுக்கு நாங்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளோம்.

அரசாங்கத்தின் ஆலோசனையை நாங்கள் தொடர்ந்து கண்காணிப்போம், எங்கள் உறுப்பினர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு மிக முக்கியமானது அதே நேரத்தில் இறுதி சடங்கு விடயத்தில் பொதுமக்களுக்கு தேவையான ஏற்பாடுகளை சரியாக செய்வோம் என கூறப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவால் இறந்த ஒருவரின் சடலத்தில் சரியாக எத்தனை நாட்கள் அந்த வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்