பிரித்தானியாவில் கொரோனா பரவ பெரும்பாலும் இவர்கள்தான் காரணமாம்: அறிவியலாளர்கள் கூறும் தகவல்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

கொரோனா வைரஸ் தொற்றியும், வெளிப்படையாக எந்த அறிகுறிகளும் காட்டாதவர்களாலேயே அது பெரும்பாலும் பரவியிருக்கலாம் என பிரித்தானிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா பரவி வரும் நிலையில், ஒருவர் இருமிக்கொண்டும் தும்மிக்கொண்டும் இருந்தால், மற்றவர்கள் அவரைக் கண்டு எச்சரிக்கையாக இருக்க வாய்ப்புள்ளது.

ஆனால், பக்கத்தில் பயணிக்கும் ஒருவர் இருமவோ தும்மவோ செய்யாமல் இருக்கும் பட்சத்தில், யாரும் அவரை பெரிய அளவில் சட்டை செய்யப்பப்போவதில்லை.

அதாவது கொரோனா வைரஸ் தொற்றியும், அவர்களுக்கு இருமலோ தும்மலோ இல்லாமலிருக்கும் நிலையில், அப்படிப்பட்டவர்கள்தான் பெருமளவில் கொரோனாவை பரப்பியிருக்கக்கூடும் என அறிவியலாளர்கள் கருதுகின்றனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் முக்கால் வாசிப்பேர் இவ்வகையில்தான் கொரோனா தொற்றை பெற்றிருக்கலாம் என அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.

சீனா, சிங்கப்பூர் மற்றும் Tianjin என்ற பகுதி ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட ஆய்வறிக்கைகளின் அடிப்படையில், உடலுக்குள் நோய் இருந்தும் சிலர் அறிகுறிகளைக் குறிப்பிட்ட காலகட்டம் வரை காட்டாமலே இருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் incubators எனப்படுகிறார்கள்.

இவர்கள்தான், தங்களுக்குத் தெரியாமலே அதிக அளவில் கொரோனாவை பரப்புவதாக நம்பப்படுகிறது.

இந்த கண்டுபிடிப்பு ஆராய்ச்சியாளர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இதற்கிடையில், பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்த தலைமுறையில் இது மிக மோசமான சுகாதாரக்கேடு என்று கொரோனா வைரஸ் தொற்றை விமர்சித்துள்ளார்.

இன்னும் சில வாரங்களில் நிலைமை மிக ஆபத்தானதாக மாறிவிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

பல குடும்பங்கள் தங்களுக்கு அன்பானவர்களை இழக்க நேரிடலாம் என்று அவர் தெரிவித்துள்ளநிலையில், தலைமை அறிவியல் ஆலோசகரான Sir Patrick Vallance 10,000 பேர் வரை ஏற்கனவே கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருக்கலாம் என்று தெரிவித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்