பிரித்தானிய சேன்ஸலர் சாஜித் ஜாவித் திடீர் ராஜினாமா... அமைச்சரவை மாற்றத்திற்கு எதிர்ப்பு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

தேர்தல் வெற்றிக்குப்பின் அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்களில், தனது அலுவலக உதவியாளர்கள் பதவி பறிப்பு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரித்தானிய சேன்ஸலர் சாஜித் ஜாவித் திடீர் ராஜினாமா செய்துள்ள சம்பவம் பிரித்தானியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்துறை செயலராக இருந்த ஜாவிதுக்கு தேர்தலுக்குப்பின் போரிஸ் ஜான்சன் சேன்ஸலர் பதவி கொடுத்தது என்னவோ உண்மைதான்.

ஆனால், அமைச்சரவையில் செய்யப்படும் மாற்றங்கள் என்ற பெயரில் வரிசையாக பலரை வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கிறார் போரிஸ்.

Andrea Leadsom, Esther McVey மற்றும் Theresa Villiers ஆகியோரை வீட்டுக்கு அனுப்பியாயிற்று.

அடுத்து, அட்டர்னி ஜெனரல் Geoffrey Cox மற்றும் வட அயர்லாந்து செயலர் Julian Smithஇன் வேலையும் காலி.

இந்நிலையில், பிரதமரின் ஆலோசகரான Dominic Cummings, ஜாவிதின் உதவியாளர்கள் அத்தனை பேரையும் வீட்டுக்கு அனுப்பச் சொல்லியிருக்கிறார்.

அவர்கள் வேலையை காலி செய்துவிட்டு, அவர்களுக்கு பதில் தான் கூறுபவர்களை உதவியாளர்களாக அமர்த்தும்படி ஜாவிதுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்துள்ள ஜாவித், தான் பெயருக்கு மட்டும் சேன்ஸலராக இருக்க முடியாது என்று கூறி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்