மருத்துவரிடமிருந்து எட்டு மாத குழந்தைக்கு பரவிய கொரோனா தொற்று? பிரித்தானியாவின் குறைந்த வயது நோயாளி இவர்தான்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

உடல் நலக்குறைவால் மருத்துவரை காணச் சென்ற எட்டு மாதக் குழந்தைக்கு அந்த மருத்துவரிடமிருந்து கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனால், அந்த குழந்தை தான் பிரித்தானியாவின் குறைந்த வயதுள்ள கொரோனா நோயாளியாக இருக்கும் என கருதப்படுகிறது.

மேற்கு சக்செக்ஸில் தனது எட்டு மாதக் குழந்தையை மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளார் ஒரு தாய்.

அந்த குட்டிப்பையன் ஏற்கனவே ஹீமோபிலியா மற்றும் நுரையீரல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறான்.

தற்போது அவனுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் காணப்படுவதையடுத்து, அந்த மருத்துவரிடமிருந்து அவனுக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, அந்த குழந்தையும் அவனது தாயும் அவர்களது வீட்டிலேயே ஒரு தனியறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்கள்.

இது போதாதென்று, அந்த பெண்ணின் நான்கு வயது குழந்தைக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சுவதாக அந்த குழந்தையின் தந்தை தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், அந்த குறிப்பிட்ட மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற மற்ற நோயாளிகளுக்கும் கொரோனா தொற்று பரவியிருக்கலாம் என்ற அச்சத்தால், சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த நோயாளிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

twnews

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்