கடைசியாக இதை மட்டும் செய்யுங்கள்... ஹரி - மேகன் தம்பதிக்கு மகாராணி கோரிக்கை!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பத்திலிருந்து விலகிய ஹரி மற்றும் மேகன் தங்களுடைய புதிய வாழ்க்கையை இடைநிறுத்திவிட்டு இறுதியாக ஒரு அரச பணியில் ஈடுபடுமாறு ராணி கோரிக்கை விடுத்துள்ளார்.

அரச குடும்ப பணிகளில் இருந்து விலகிய ஹரி மற்றும் மேகன் தற்போது கனடாவில் தங்களுடைய 9 மாத குழந்தை ஆர்ச்சியுடன் வசித்து வருகின்றனர்.

வியாழக்கிழமை இரவு அவர்கள் பிரபலங்கள் நிறைந்த ஜே.பி. மோர்கன் மாநாட்டில் முக்கிய பேச்சாளர்களாக கலந்துகொண்டனர். அதன்மூலம் அவர்கள் 1 மில்லியன் டொலர் வரை சம்பாதித்திருக்கலாம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், கார்ப்பரேட் சந்தையில் அதிக சம்பளம் வாங்கும் பேச்சாளர்களாக ஹாரி மற்றும் மேகன் இருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

இதனால் தம்பதியினரின் பணம் சம்பாதிக்கும் முயற்சிகளால் ராணி 'குறிப்பிடத்தக்க வகையில் நிதானமாக' இருப்பதாக அவர்களுடைய நண்பர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் தம்பதியினர் தங்களுடைய புதிய வாழ்க்கையை இடைநிறுத்தம் செய்துவிட்டு, வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் வருடாந்திர காமன்வெல்த் சேவையில் இறுதியாக கலந்துகொள்ள ராணி அழைப்பு விடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

அரச குடும்ப உறுப்பினர்கள் மற்றும் 53 உறுப்பு நாடுகளின் அரசாங்க பிரதிநிதிகள் ஆகியோர் வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் மார்ச் 9 மதியம் ஒரு மணி நேர நிகழ்ச்சிக்காக கூட உள்ளனர்.

இதில் கலந்துகொள்வதன் மூலம், ஹரி மற்றும் மேகனின் இறுதி அரச கடமையாக இது இருக்கலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நிகழ்வில், நிறைமாத கர்ப்பிணியாக கலந்துகொண்ட மேகன் தற்போது 9 மாத ஆர்ச்சியுடன் கலந்துகொள்வதற்காக கனடாவிலிருந்து தனது பெற்றோருடன் பறப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்