லண்டனில் பாலியல் தொழிலாளர்களை குறிவைத்து நடந்த சம்பவங்கள்! அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சி.. சிக்கிய குற்றவாளிகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் பாலியல் தொழில் செய்யும் பெண்களை குறிவைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வர் வசமாக சிக்கிய சூழலில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு லண்டனில் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பாலியல் தொழிலாளர்களை குறி வைத்து கொள்ளை சம்பவத்தில் ஒரு கும்பல் ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில் இந்த கும்பலை சேர்ந்த நான்கு ஆண்களை பொலிசார் கைது செய்தனர்.

அவர்கள் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி Robertas Zilionas (21) என்பவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், Jospin Ble (23) என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் Joshua Coke (21) என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறையும், Erlandos Vyte என்பவருக்கு 12 ஆண்டுகள் சிறையும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நால்வரும் பாலியல் தொழிலாளிகளை மட்டுமே குறிவைப்பார்கள்.

அதில் ஒருவர் வாடிக்கையாளர் போல பாலியல் தொழிலாளியின் இடத்துக்கு செல்வார்.

பாலியல் தொழில் செய்யும் பெண் வீட்டு கதவை திறந்த பின்னர் மற்ற மூவரும் பின்னால் வந்து அவரை கட்டி வைத்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் உள்ள பணம், செல்போன்கள், வாங்கி கார்டுகளை திருடி சென்றுவிடுவார்கள்.

Metropolitan Police

மேலும் நால்வரும் சேர்ந்து கொள்ளையடிக்கும் பெண்ணை அடித்து உதைத்து அவர்கள் காயமடைய செய்வதோடு பல பெண்கள் இவர்களால் உளவியல் ரீதியான தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளனர்.

இவர்கள் ஒரு பெண் வீட்டுக்குள் புகுந்து அவரிடம் கொள்ளையடிக்கும் அதிர்ச்சியளிக்கும் சிசிடிவி காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இந்த நால்வரும் ஏழு இடங்களில் இதே முறையை பின்பற்றி கொள்ளையடித்துள்ளனர்.

இது குறித்து பாலியல் தொழிலாளிகளுக்கான பிரச்சனைகளை கையாளும் பொலிஸ் உயர் அதிகாரி Guy Collings கூறுகையில், பாலியல் தொழிலாளர்கள் எந்தவொரு வன்முறை அல்லது துஷ்பிரயோகத்துக்கு பலியாகக் கூடாது.

அவர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டு வர தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என கூறியுள்ளார்.

Metropolitan Police

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்