பிரித்தானியாவில் புயலால் நிறுத்தப்பட்ட விமானங்கள்! ஆனால் பயணிகளுக்கு இதில் நஷ்டம் இல்லா அறிவிப்பு

Report Print Abisha in பிரித்தானியா

பிரித்தானிய விமான நிறுவனம், சியரா (Ciara) புயலால் சேவையை நிறுத்துவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பிரித்தானியாவில், வார இறுதி நாட்களான நேற்றும், இன்றும் சியராவின் தாக்கம் இருக்கும் என்று வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இன்று இரவு வரை பிரித்தானியர்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விமானங்கள் நிறுத்தம்

எனவே பிரித்தானிய உள்நாட்டு மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு செல்லும் விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. அதன்படி லண்டனில் உள்ள Heathrow, Gatwick மற்றும் லண்டன் சிட்டி விமான நிலையங்களில் இருந்து வரும் மற்றும் செல்லும் விமானங்களை நிறுத்துவதாக பிரிட்டீஷ் ஏர்வேய்ஸ் தெரிவித்துள்ளது.

ஆனால், பயணிகள் தங்கள் பயணத்தை மாற்றி மற்றொரு நாளைக்கு அந்த பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் பிரிட்டீஸ் ஏர்வேய்ஸ் தெரிவித்துள்ளது. அதற்கான கட்டனம் செலுத்த வேண்டியது இல்லை. முன்பதிவு செய்தால் மட்டும் போதும்.

The Met Office's amber warning for wind covers Wales and most of England
ஸ்காட்லாந்தில் மற்றும் வேல்ஸில் பாதிப்பு

சியரா புயல், ஸ்காட்லாந்து பகுதியை 70 மைல் வேகத்தில் தாக்கியதால் அங்குள்ள முக்கிய பாலங்கள் மூடப்பட்டுள்ளது.

மேலும், கூரை ஒன்று இடிந்து விழுந்ததில் மூன்று பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஸ்காட்லாந்தின் 22 இடங்களிலும் வேல்ஸில் 7 இடங்களிலும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்று கிழமையான இன்று 08:00 முதல் 21:00GMT வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அளவிற்கு காற்றின் வேகம் இருக்கும் என்ற முன்னதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஸ்காட்லாந்தில் சில இடங்களில் மட்டும் 100மைல் வேகத்தில் காற்று வீசலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்