சீனாவில் இருந்து மீட்ட கடைசி விமானம்! பிரித்தானியர்களுக்கு இருந்த உடல் வெப்பத்தல் அனுமதி மறுப்பு

Report Print Abisha in பிரித்தானியா

சீனாவில், இருந்து பிரித்தானியர்களை அழைத்து வரும் கடைசி விமானம் வந்தடைந்தது.

கொரோனா வைரஸ் தாக்குதலால், அங்குள்ள வெளிநாட்டவர்களை சொந்த நாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக அழைத்து சென்று வருகின்றது.

இந்நிலையில், சீனாவில் உள்ள 200 பிரித்தானியர்களை கடைசியாக மீட்டுள்ளது. அந்த விமானம் Brize Norton கிராமத்தில் வந்தடைந்துள்ளது.

அவர்கள் அனைவரும் 14 நாட்களுக்கு Oxfordshire உள்ள Milton Keynes என்ற அரங்கத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியர்களை அழைத்து வந்தது இது இரண்டாவது மற்றும் கடைசி விமானமாகும்.

இந்த விமானத்தில், பயணிக்க இருந்த இரண்டு பிரித்தானியர்களுக்கு உடல் வெப்பநிலை அதிகமாக இருந்ததால், அவர்களுக்கு பயணிக்க தடை செய்யப்பட்டது என்று பெய்ஜிங்கிற்கான பிரித்தானிய தூதர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக 100-க்கு மேற்பட்ட பிரித்தானிய மற்றும் வெளிநாட்டினர் கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் Arrowe Park மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இன்று விமானத்தில் அழைத்து வரப்பட்டுள்ள பிரித்தானியர்கள் தங்கியுள்ள இடத்தில், அவர்களின் பொழுதுபோக்கிற்காக புத்தகங்கள், விளையாட்டு பொருட்கள், அலைப்பேசிகள், டிவி, போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது வரை சீனாவை தவிர்த்து கொரோனாவால் 288 பேர் 24 நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மொத்தம் இதுவரை சீனாவில் 35,000பேர் பாதிக்கப்பட்டு 803பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்