லண்டன் பேருந்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சுவாரசிய அனுபவம்! என்ன ஆச்சு தெரியுமா? வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டன் பேருந்தில் பயணிகள் பயணிக்கும் போது முயல் ஒன்று அங்கு இருந்ததை பார்த்த அவர்களுக்கு சுவாரசியமான அனுபவம் ஏற்பட்டது.

லண்டனில் உள்ள பேருந்தில் பயணிகள் பலரும் இருக்கையில் அமர்ந்திருந்தனர்.

அப்போது Suzanne Azzopardi என்ற பெண் பயணி பேருந்து ஓரத்தில் முயல் ஒன்று கீழே உட்கார்ந்திருந்ததை பார்த்து முதலில் திகைத்தார்.

பின்னர் எல்லோரும் முயலை பார்த்தனர், எப்படி முயல் உள்ளே ஏறியது என யோசித்த போது தான் நபர் ஒருவர் அதை எடுத்து வந்தது தெரியவந்தது.

புற்களும் அங்கு வைக்கப்பட்டு முயல் அதன் மீது உட்கார்ந்திருந்தது.

இது குறித்து Suzanne கூறுகையில், முயலால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படவில்லை, ஆனால் வினோதமான பயணமாக இது இருந்தது.

முயலை எடுத்து வந்தவரிடம் யாரும் கடைசி வரையில் எதுவும் பேசவில்லை என கூறினார்.

லண்டன் பேருந்தில் ஆபத்தில்லாத மற்றும் சக பயணிகளுக்கு தொந்தரவு கொடுக்காத விலங்குகளை பயணிகள் அழைத்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்