சீனாவில் சிக்கியுள்ள 200க்கும் அதிகமான பிரித்தானியர்கள்: அவசர நடவடிக்கைக்கு உத்தரவு!

Report Print Vijay Amburore in பிரித்தானியா

சீனாவில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட பிரித்தானிய மக்களை அவசர அவசரமாக வெளியேற்றுவது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

கொடிய கொரோனா வைரஸானது சீனா துவங்கி பல்வேறு நாடுகளிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 56ஐ எட்டியுள்ளது. 1200க்கும் அதிகமானோர் வைரஸ் தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகி தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த வைரஸ் தாக்குதலானது மற்ற நகரங்களுக்கும் பரவி விடாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 17க்கும் அதிகமான நகரங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் 56 மில்லியன் மக்கள் முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில் சீனாவில் சிக்கியுள்ள 200க்கும் மேற்பட்ட பிரித்தானிய மக்களை அவசர அவசரமாக வெளியேற்றுவது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பரிசீலித்து வருவதாக செய்தி வெளியாகியுள்ளது.

வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் ஒரு விமானத்திற்கான தளவாடங்களை ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாகக் கூறப்படுகிறது. மக்களை அங்கேயே வைத்திருப்பது ‘மரண தண்டனை’ போன்றது என அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் 'ஹூபே' மாகாணத்தில் இருப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்