பிரித்தானியாவில் கழிப்பறையில் ரகசிய கமெரா வைத்த பயிற்சியாளர்! போனில் இருந்த 40 வீடியோ... அதிர்ச்சி பின்னணி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் பெண்கள் கழிப்பறையில் ரகசிய கமெரா வைத்திருந்த விளையாட்டு பயிற்சியாளருக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வேல்ஸின் Chester நகரை சேர்ந்தவர் Daniel Anthony Chadwick-Jones.

இவர் ஜிம்னாஸ்டிக் விளையாட்டு பயிற்சியாளராக உள்ளார். Daniel பயிற்சி தரும் விளையாட்டு அகாடமியில் உள்ள அறையில் அவர் உட்கார்ந்திருந்த போது அவரின் நடவடிக்கையில் ஊழியருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவரின் செல்போனை சோதனை செய்த போது அதில் அகாடமியில் உள்ள கழிப்பறைக்குள் பெண்கள் உடை மாற்றுவது உள்ளிட்ட 40 வீடியோக்கள் இருந்தன.

இது குறித்த பொலிசில் புகார் தரப்பட்ட நிலையில் Danielயிடம் விசாரணை நடத்தப்பட்டது.

Daily Post Wales

அப்போது கழிப்பறைக்குள் ரகசிய கமெராவை வைத்து பெண்களை அவர் வீடியோ எடுத்து ரசித்து வந்தது தெரியவந்தது.

இதன்பின்னர் Daniel கைது செய்யப்பட்டு அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதன்படி Daniel-க்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதோடு 80 நாட்கள் மறுவாழ்வு நடவடிக்கை தொடர்பான வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்றும் 240 மணி நேரம் ஊதியம் இல்லாமல் சமுதாய பணியை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Daily Post Wales)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்