என் அம்மாவை ஒரு காலத்திலும் நான் மன்னிக்க மாட்டேன்: வேதனையுடன் மகள் பகிர்ந்த சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

தனது சொந்த தாயிடமே கணவனை பறிகொடுத்த மகள், அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன் என வேதனை தெரிவித்துள்ளார்.

தென்மேற்கு லண்டனின் Twickenham பகுதியை சேர்ந்தவர் 34 வயதாகும் லாரன் வால். இவர் தனது 19 வயதில் விமான தொழிலாளி பவுல் வைட் என்பவரை திருமணம் செய்துள்ளார்.

இவர்களின் திருமணத்திற்கு 15000 பவுண்டுகள் பணம் கொடுத்ததோடு மட்டுமின்றி, தேனிலவிற்கான ஏற்பாடுகளையும், லாரனின் தாய் ஜூலி (53) கவனித்துள்ளார்.

அதன்பிறகு எட்டு வாரங்களுக்குப் பிறகு பவுல், லாரனை விட்டு பிரிந்து சென்றார். அடுத்த 9 மாதங்கள் கழித்து அவரது தாய் ஜூலி, பவுலுடன் வசித்து வருவதாகவும், தங்கள் இருவருக்கும் ஒரு குழந்தை பிறந்திருப்பதாகவும் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

இதுகுறித்து லாரன் கூறுகையில், எனக்கு 18 வயது நடக்கும்போது முதன்முறையாக பவுலை சந்தித்தேன். அவர் தான் என்னிடம் காதலை கூறினார். இருவருக்கும் அதில் சம்மதம் ஏற்பட்டதை அடுத்து, ஒன்றாக வாழ்க்கை நடத்த ஆரம்பித்தோம். எங்கள் இருவருக்கும் ஒரு பெண் குழந்தை பிறந்தது.

உறவினர்கள், நண்பர்கள் அனைவரின் மத்தியில் திருமணம் செய்துகொண்டோம். எங்களது திருமணத்தில் எனது அம்மா அதிக மகிழ்ச்சியுடன் இருந்தார். அவர் எனக்கான செலவுகளையும் செய்தார்.

திருமணத்திற்கு பின்னர், பவுல் எனது அம்மாவிடம் பாசமாக இருப்பார். அப்போது நான் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

ஒருமுறை எனது தங்கை அம்மாவின் செல்போனை ஆய்வு செய்தபோது பவுலுக்கு அவருக்கும் இடையே அதிக உரையாடல் நடந்திருப்பதாக என்னிடம் கூறினாள். ஆனால் அதனை என்னுடைய அம்மா முற்றிலும் மறுத்துவிட்டார்.

பவுல் என்னிடம் எப்போதுமே செல்போனை கொடுக்க மாட்டார். இதுகுறித்து கேட்டபோது எனக்கும் பவுலுக்கு இடையே சண்டை ஏற்பட்டது. உடனே பவுல் திருமண மோதிரத்தை கழற்றி வைத்துவிட்டு, என்னையும் என் மகளையும் விட்டு பிரிந்து சென்றார்.

இதற்கிடையில் எனது அம்மாவும், பவுலும் ஒன்றாக வசித்து வருவதாக எனக்கு செய்தி வந்தது. என்னால் அதனை நம்ப முடியவில்லை. உலகிலேயே நான் நேசித்த, நம்பிய இரண்டு நபர்கள் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துவிட்டனர்.

என் அம்மா எனக்கு செய்த மிகப்பெரிய மோசமான காரியம் இது. ஒருநாள் எனது அம்மா போன் செய்தார். நான் ஆகஸ்ட் 14, 2004 அன்று திருமணம் செய்து கொண்டேன். அவர்கள் ஆகஸ்ட் 15, 2009 அன்று திருமணம் செய்ய உள்ளதாக கூறினார்கள். அதனை கேட்க எனக்கு அருவருப்பாக இருந்தது.

தாங்க முடியாத அளவிற்கு வலியை கொடுத்தது. ஆனால் வேறு வழியில்லை. எனது மகளுக்காக அதனை பொறுத்துக்கொண்டு அந்த திருமணத்திற்கு சென்றேன்.

இதுவரை அவர் பலமுறை என்னிடம் மன்னிப்பு கேட்டுவிட்டார். ஆனால் நான் ஒருபோதும் மன்னிப்பதாக இல்லை. என்னுடன் உறவை புதுப்பித்துக்கொள்வதற்கு தொடர்ந்து முயற்சிக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்