பணத்தாசை... பிரித்தானிய அரச குடும்பத்தை கேவலப்படுத்திவிட்டார்கள்: கொந்தளிக்கும் மேகனின் தந்தை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பெண்கள் அனைவரையும் போல பணத்தாசையால் தமது மகள் மேகன் பிரித்தானிய அரச குடும்பத்தினரை கேவலப்படுத்தியதாக தோமஸ் மெர்க்கல் கொந்தளித்துள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி, அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர்,

முதன் முறையாக பிரபல செய்தி ஊடகம் ஒன்றிற்கு தோமஸ் மெர்க்கல் விரிவாக பேசியுள்ளார்.

அதில், மேகன் மற்றும் ஹரியின் நடவடிக்கை உண்மையில் சங்கடமாக உள்ளது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை பெருவழியில் கொண்டு சேர்த்துள்ளனர் என்றார்.

ஹரி மற்றும் மேகன் தம்பதி திருமணம் செய்துகொண்டபோது, அவர்கள் ஒரு கடமையை ஏற்றுக்கொண்டனர், மேலும் பிரித்தானிய அரச குடும்பத்தின் ஒரு பகுதியாக இருப்பதும், அரச குடும்பத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதும் கடமையாகும். ஆனால் அவர்கள் அதை செய்யாதது முட்டாள்தனமான செயல் எனவும் தோமஸ் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பிரித்தானிய அரச குடும்பம் மிக நீண்ட காலமாக நீடித்துவரும் குடும்பங்களில் ஒன்றாகும். மேகனும் ஹரியும் அதை அழிக்கிறார்கள், அவர்கள் அதை கேவலப்படுத்துகிறார்கள், அதை இழிவுபடுத்துகிறார்கள், மேகனும் ஹரியும் இதைச் செய்திருக்க கூடாது என காட்டமாக தெரிவித்துள்ளார் தோமஸ்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்