பாரம்பரிய உடையில் தமிழர்களுடன் பொங்கல் கொண்டாடிய பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

Report Print Vijay Amburore in பிரித்தானியா
642Shares

பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் பாரம்பரிய உடையில், தமிழர்களுடன் சேர்ந்து பொங்கல் கொண்டாடியுள்ளனர்.

இந்த வாரம் பிரித்தானியா நாடாளுமன்ற வீடுகளில் நடைபெற்ற இரண்டு நாள் பொங்கல் கொண்டாட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் உள்ளூர் தமிழர்களுடன் கலந்துகொண்டு பொங்கலை சிறப்பித்துள்ளனர்.

தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டியை அணிந்துகொண்ட அவர்கள், பிரித்தானிய முன்னேற்றத்தில் தமிழ் சமூகம் அளித்த விலைமதிப்பற்ற பங்களிப்பை பற்றி எடுத்துரைத்தனர்.

Tamil guardian

அப்போது பேசிய பாராளுமன்ற உறுப்பினரும் கல்விக்குழுவின் தலைவருமான ராபர்ட் ஹால்ஃபோன், “நான் நீதியை நம்புகிறேன், சுயாதீனமாக முடிவெடுக்கும் உரிமையை நம்புகிறேன். தமிழர்கள் பல ஆண்டுகளாக ஒரு பயங்கரமான இனப்படுகொலைக்கு ஆளானார்கள் என்று நம்புகிறேன்".

Tamil guardian

"அந்த விடயங்கள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் தகுதியுள்ள சுயாதீனமாக முடிவெடுக்கும் உரிமையும், சுயாட்சியும் உங்களிடம் இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” எனப்பேசினார்.

Tamil guardian

மேலும், "இந்த இனப்படுகொலையையும் இந்த யுத்தத்தையும் செய்தவர்கள் மற்றும் ஆயிரமாயிர கணக்கிலான தமிழர்களை சிறையில் அடைத்தவர்கள் ... Hague-ல் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் பதில் சொல்லக்கூடிய பொறுப்புடையவர்கள் என்று நான் நினைக்கிறேன் என தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்