பிரித்தானியாவில் அமைந்துள்ள இந்திய உணவகம் ஒன்றிற்கு வந்த வாடிக்கையாளர்கள் சிலர், இலவசமாக கபாப் கொடுக்குமாறு ஊழியர்களை வற்புறுத்தியுள்ளனர்.
கிரேட்டர் மான்செஸ்டரில் உள்ள ஹேவுட் தந்தூரி பிளாசா என்ற உணவகத்தில் இந்தசம்பவம் நடைபெற்றுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், உணவகத்துக்கு வந்த சிலர் ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்வதைக் காணமுடிகிறது.
ஒரு ஊழியர் வாக்குவாதத்தில் ஈடுபடும் மற்றொரு ஊழியரை முடிந்தவரை சமாதானப்படுத்துகிறார்.
ஆனால் வாடிக்கையாளர்களில் ஒருவரின் பேச்சு அதிகமாகவே, சமாதானம் செய்த ஊழியரே கோட்டைக் கழற்றி வைத்துவிட்டு அந்த வாடிக்கையாளரை ஒரு குத்து விட, தள்ளிப்போய் விழுகிறார் அவர்.
அதற்குள் அந்த ஊழியருக்கு ஆதரவாக மற்றொரு ஊழியர் கை நிறைய மிளகாய்ப்பொடியை அள்ளி வாடிகையாளர்கள் முகத்தில் வீச, கண்களில் மிளகாய்ப்பொடிபட்டதால் திக்குமுக்காடிப்போகிறார்கள் அவர்கள்.
குத்து வாங்கிய நபர் மீண்டும் சண்டைக்கு வர, மீண்டும் அவருக்கு ஒரு குத்து விட்டதுடன், வெளியே போங்கள் என்று அவர்களைத் துரத்துகிறார்கள் உணவக ஊழியர்கள்.
இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட நிலையில், பலர் உணவக ஊழியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள்.
ஓசியில் கபாப் கேட்பவர்களை அவர்கள் விமர்சிக்க, மற்றும் சிலரோ அதற்காக மிளகாய்ப்பொடியையா அள்ளி வீசுவது என்று கோபப்பட்டுள்ளார்கள்.