லண்டனில் நடிகை சோனம் கபூருக்கு நடந்த மோசமான சம்பவம்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

லண்டனில் ஒரு உபேர் டிரைவருடன் தனது வாழ்க்கையின் பயங்கரமான சூழ்நிலையை அனுபவித்ததாக நடிகை சோனம் கூறியுள்ளார்.

நட்சத்திர நடிகர் அனில் கபூரின் மகள் சோனம்(34), கணவர் ஆனந்த் அஹுஜாவுடன் லண்டனில் வீட்டை கொண்டிருப்பதால், தனது நேரத்தை பிரித்தானியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் செலவழித்து வருகிறார்.

இந்த நிலையில் உபேர் வாகனத்தில் பயணித்த அவர் மோசமான அனுபவத்தை பெற்றதாக, 12.8 மில்லியன் பின்தொடர்பவர்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

அதில், தோழர்களே எனக்கு @UberLondon உடன் பயங்கரமான அனுபவம் ஏற்பட்டது. தயவுசெய்து கவனமாக இருங்கள். உள்ளூர் பொது போக்குவரத்து அல்லது வண்டிகளைப் பயன்படுத்துவதே சிறந்த மற்றும் பாதுகாப்பானது.

நான் பயணித்த காரின் ஓட்டுநர், நிலையற்றவராக இருந்தார். கத்தினார், கூச்சலிட்டார். அதன்காரணமாக நான் நடுக்கத்தில் இருந்தேன்.

உபேர் நிறுவனத்திடம் புகார் செய்ய முயற்சித்தேன். ஆனால் மென்பொருளால் துண்டிக்கப்பட்ட பல பதில்களைப் பெற்றேன் என கூறியிருந்தார்.

இதற்கு உபெர் நிறுவனம் தனது தானியங்கி பதிலில், "சோனம் இந்த சம்பவத்திற்கு மன்னிக்கவும். தயவுசெய்து உங்கள் மின்னஞ்சல் முகவரி மற்றும் மொபைலுடன் ஒரு மெசேஜ் அனுப்ப முடியுமா?" என கூறியிருந்தது.

உபெர் நிறுவனத்தின் பயன்பாட்டில் தங்கள் அடையாளத்தை போலியாகக் கொண்ட ஓட்டுனர்களுடன் 14,000 க்கும் மேற்பட்ட பயணங்கள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் கண்டறிந்ததை அடுத்து, உபெர் நிறுவனத்தின் உரிமம் நவம்பர் மாதம் பறிக்கப்பட்டது.

ஆனால் டிசம்பர் மாதம் மேல்முறையீடு செய்து தலைநகரில் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடிகையின் சமீபத்திய புகார் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக உபெர் சம்பவத்திற்கு ஒரு வாரத்திற்கு முன், நடிகை தனது சாமான்களை இழந்ததற்காக கூறி பிரிட்டிஷ் ஏர்வேஸுடன் தனது உறவுகளை முறித்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்