ஆவியுடன் விளையாடும் குழந்தை... அதை படம் பிடிக்கும் தாய்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை ஒன்று ஆவியுடன் விளையாட, அதை வீடியோவில் படம் பிடிக்கிறார் அதன் தாய்!

பிரித்தானிய பெண் ஒருவர் தனது குழந்தை தனது அறையில் யாருடனோ பேசுவதை கவனித்துள்ளார்.

அங்கு யாருமில்லாத நிலையில், குழந்தை யாருடனோ பேசுவதை கவனித்த Georgia Hooson (20) என்னும் அந்த தாய், அதை வீடியோ எடுத்துள்ளார்.

அந்த வீடியோவை கவனிக்கும்போது, குழந்தை சுவரை நோக்கி பேசுவதையும், அங்கு ஏதோ வெள்ளையாக நகர்வதையும் கவனித்துள்ளார்.

இரண்டாவது எடுத்த ஒரு வீடியோவில், சட்டென தனது குழந்தை தொட்டிலில் பின்னோக்கி நகர்வதையும், அவள் நகர்ந்ததும் அவளை நோக்கி ஒரு வெள்ளை உருவம் வருவதையும் காணமுடிகிறது.

Georgiaவின் பக்கத்து வீட்டில் குடும்ப நண்பர் ஒருவர் வசித்துவந்துள்ளார். ஆறு ஆண்டுகளுக்கு முன் அவர் திடீரென இறந்து போக, அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அவர்தான் இப்போது தனது குழந்தையை பார்க்க வருவதாக நம்புகிறார் Georgia. ஒரு முறை அந்த நண்பரின் புகைப்படத்தை குழந்தையிடம் Georgia காட்ட, பொதுவாக அந்நியர்களைக் கண்டால் பயப்படும் குழந்தை அந்த நபரின் புகைப்படங்களைப் பார்த்ததும், கைகொட்டி சிரித்து மகிழ்ந்தாளாம்.

ஆகவே, தங்கள் நண்பர் தன் குழந்தையை பார்க்க வருவதாக நம்பும் Georgia, அவரிடம்தான் தன் குழந்தை விளையாடுவதாக நம்புகிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்