விமானம் இறங்கும் நேரத்தில் சுகவீனம் அடைந்த விமானி: அவசர உதவியை அழைத்த சக விமானி!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ஏதென்சிலிருந்து லண்டன் நோக்கி வந்துகொண்டிருந்த விமானம் ஒன்று தரையிறங்குவதற்கு சற்று முன் அதன் விமானிகளில் ஒருவருக்கு உடல் நல பாதிப்பு ஏற்பட்டது.

விமானங்களில், விமானியின் அறையில் புகையால் ஏற்படும் பாதிப்புகள் பெருகி வருவதாக கூறப்படும் நிலையில், இந்த விமானத்திலும் அதேதான் நிகழ்ந்துள்ளது.

உடனே விமான கட்டுப்பாட்டை தன் கையில் எடுத்துக்கொண்ட மற்ற விமானி, தகவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவசர உதவி தகவல் அளித்துள்ளார்.

புகையால் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்காக ஆக்சிஜன் மாஸ்க் அணிந்துகொண்டு விமானத்தை பத்திரமாக தரையிறக்கியுள்ளார் அவர்.

விமானம் தரையிறங்கியதும், விரைந்து வந்த மருத்துவ உதவிக்குழுவினர் பாதிக்கப்பட்ட விமானியை பரிசோதித்து அவரை உடனடியாக வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால், விமானியின் உடல் நலம் பாதிக்கப்பட்ட விடயம் அந்த விமானத்தில் பயணித்த பயணிகளுக்கோ, விமான ஊழியர்களுக்கோ தெரியாததால், அவர்கள் பரபரப்படையாமல் சாதாரணமாக இறங்கிச் சென்றுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்