அரச குடும்ப பொறுப்பிலிருந்து விலகுவதாக கூறிய பின் முதன்முதலாக வெளியில் வந்த ஹரி! எப்படியிருக்கிறார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய அரச பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்த பின்னர் முதல் முறையாக இளவரசர் ஹரியின் புகைப்படம் மற்றும் அவர் பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவர் மனைவி மேகனும் அரச பொறுப்புகளில் இருந்து விலகி தனியாக வாழ விரும்புவதாக அறிவித்தார்கள்.

அவர்களின் விருப்பத்துக்கு மகாராணியாரும் ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் அரச பொறுப்புகளில் இருந்து விலகும் அறிவிப்புக்கு பின்னர் ஹரி வெளியிடங்களில் தென்படாமல் இருந்தார்.

இந்த சூழலில் தனது கடைசி அரச பொறுப்பு பணியான 2021ஆம் ஆண்டு ரக்பி உலகக்கோப்பை லீக் போட்டியை தொடங்கி வைப்பதற்கு முன்னர் அது தொடர்பான விடயத்தில் கலந்து கொள்ள இன்று பக்கிங்ஹாம் அரண்மணைக்கு வந்தார்.

காரில் சோகமான முகத்துடன் தனது செல்போனை இயக்கியபடி அவர் உட்கார்ந்திருந்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனிடையில் இது குறித்து ஒரு வீடியோவில் பேசியுள்ள ஹரி, ரக்பி லீக்கின் போது நீங்கள் கடினமாக இருக்க வேண்டும். உங்கள் உணர்வுகளை நீங்கள் காட்ட முடியாது.

இதன் மூலம் நாம் உடல் ஆரோக்கியத்துடன் இருப்பது மட்டுமல்லாமல், மன வலிமையுடன் இருப்பதையும் உணர வேண்டும்.

ரக்பி லீக் உலகக் கோப்பை 2021ல் மன ஆரோக்கியம் சாசனத்தை ஆதரிப்பதில் பெருமைப்படுகிறேன் என கூறியுள்ளார்.

இதே போல கனடாவில் உள்ள மேகன் நேற்று Justice for Girls அமைப்பை சேர்ந்த பெண்களுடன் சந்தித்து உரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்