ஹரிக்கு அழைப்பு விடுத்த பர்கர் கிங்: சமூக வலைத்தளத்தில் கவனத்தை ஈர்க்கும் டுவிட்

Report Print Kavitha in பிரித்தானியா

பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகப் போவதாக இளவரசர் ஹரியும் மேகன் மெர்கலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தனர்.

இந்நிலையில் பிரிட்டிஷ் அரச குடும்பத்திலிருந்து விலகிய ஹரிக்கு தங்கள் நிறுவனத்தில் வேலை தருவதாக பர்கர் கிங் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில் ஹரியைக் குறிப்பிட்டு, “ ஹரி - இந்த ராஜ குடும்பம் பகுதி நேர வேலைகளை வழங்குகிறது” என்று கூறியிருந்தது.

அதுமட்டுமின்றி தனது மற்றொரு ட்வீட்டில், “எங்களுடைய ராஜ்ஜியத்தில் உங்களுக்கு எப்போதும் வேலை உண்டு” என்றும் குறிப்பிட்டுள்ளது.

மேலும் பர்கர் கிங்கின் இந்த ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்