மோதிக்கொண்ட இரு மருத்துவர்கள்... பாதிக்கப்பட்ட குழந்தைகள்: நிர்வாகம் எடுத்த நடவடிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரபல மருத்துவமனை ஒன்றில் இரு சிறந்த மருத்துவர்களுக்கிடையிலான மோதல் நோயாளிகளை பாதிக்கும் நிலை ஏற்பட்டதையடுத்து நிர்வாகம் தலையிடும் சூழல் ஏற்பட்டது.

லண்டனிலுள்ள பிரபல மருத்துவமனை Great Ormond Street மருத்துவமனை. அங்கு பணிபுரியும் இரண்டு மூத்த மருத்துவர்களுக்கிடையே நீண்டகாலமாக மோதல் இருந்துவந்தது.

சிறுநீரக அறுவை சிகிச்சை துறையின் அந்த இரு மருத்துவர்களும் சிறந்த மருத்துவர்களாக இருந்தும், அவர்களுக்கிடையே உள்ள பிரச்சினையால், பணி பாதிக்கப்பட்டது.

அவர்களுக்கு கீழே பணியாற்றும் மற்ற மருத்துவர்கள் பாதிக்கப்பட்டனர். ஒரு கட்டத்தில் குழந்தை நோயாளிகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்படவே, மருத்துவமனை நிர்வாகம் பிரச்சினையில் தலையிட நேர்ந்தது.

JOHN STILLWELL/PA

மத்தியஸ்தர்களைக் கொண்டு இரண்டு மருத்துவர்களையும் சமரசம் செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து, தற்போது நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் மிகச்சிறந்த மருத்துவர்கள் மற்றும் நோயாளிகளை நன்கு கவனித்துக் கொள்பவர்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லாத நிலையில், தற்போது மீண்டும் அவர்கள் இணைந்து செயல்படத் துவங்கியுள்ளதால் நோயாளிகளுக்கு மீண்டும் மிகச்சிறந்த சேவை கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் மருத்துவமனை செய்தி தொடர்பாளர் ஒருவர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்