இளவரசர் ஹரி - மேகன் தொடர்பில் அரச குடும்பம் முன்வைக்கும் ஆறு முக்கிய விடயங்கள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

ஹரி - மேகன் தம்பதி பிரித்தானியா அரச குடும்பத்தில் இருந்து வெளியேறும் முடிவை ராணியார் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அரச குடும்பம் ஆறு முக்கிய விடயங்களை முன்வைத்துள்ளது.

கடந்த சில மாதங்களாக ஒருவருக்கு ஒருவர் முகம் கொடுத்து பேசாத இளவரசர் வில்லியம் உள்ளிட்ட அரச குடும்பத்தினர், முடியாட்சியைக் காப்பாற்ற ஒன்று கூடியுள்ளனர்.

ஹரி மற்றும் மேகன் தம்பதி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட முக்கிய கூட்டத்திற்கு பின்னர்,

ஆறு முக்கிய விடயங்களை ஹரி மற்றும் மேகன் மெர்க்கலுக்கு முன்னர் அரச குடும்பம் முன்வைத்துள்ளது.

முதலாவதாக இளவரசர் ஹரிக்கு வழங்கப்பட்டுள்ள பட்டம். முக்கிய கூட்டத்திற்கு பின்னர் ராணியார் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹரி தம்பதியின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அரச குடும்பத்தில் இருந்து இளவரசர் ஹரி வெளியேறுவதால் தமக்கு வழங்கப்பட்டுள்ள பட்டங்களை இழக்கிறார்.

இரண்டாவதாக, நிதி தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தொடர்பில் முடிவெடுக்க வேண்டும் என்ற அறிவுறுத்தல் முன்வைக்கப்படுகிறது.

இதில் ஹரி தம்பதி முன்வைக்கும் திட்டத்திற்கு அரண்மனை ஒப்புதல் வழங்க வேண்டும்.

மூன்றாவதாக ஹரி - மேகன் தம்பதிகளின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு "செயல்படக்கூடிய அணுகுமுறையை" கண்டுபிடிப்பதாக ராணியாரும் எஞ்சிய அரச குடும்பத்து உறுப்பினர்களும் உறுதியளித்துள்ளனர்.

நான்காவதாக, இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிகளின் ஆலோசகர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் அரண்மனைக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.

ஐந்தாவதாக, வியாபார நோக்கில் அரச குடும்பத்து தகவல்கள் அனைத்தையும் ஊடகங்களுக்கு வெளியிட முடிவு செய்தால், அது தொடர்பாக அரண்மனையில் மூத்த உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஆறாவதாக ஹரி தம்பதி எதிர்காலத்தில் குடியேறவிருக்கும் எந்தவொரு புதிய வீட்டையும் இங்கிலாந்து பாதுகாப்பு சேவைகள் மற்றும் பக்கிங்ஹாம் அரண்மனை பாதுகாப்பு காரணங்களால் மதிப்பீடு செய்ய வேண்டும்.

மேலும், ஹரி தம்பதி வெளியேறுவது தொடர்பில் அடுத்தகட்ட விவாதங்களை முன்னெடுக்கும் நபர்கள் தொடர்பிலும் தகவல் வெளியாகியுள்ளது.

இதில், ராணியாரின் தனிப்பட்ட செயலாளர் சர் எட்வர்ட் யங், இளவரசர் சார்லஸின் தனிப்பட்ட செயலாளர் கிளைவ் ஆல்டர்டன் மற்றும் வில்லியமின் உயர்மட்ட உதவியாளர் மற்றும் முன்னாள் அரசு ஊழியர் சைமன் கேஸ்.

இளவரசர் ஹரியின் தனிப்பட்ட செயலாளர், முன்னாள் தூதர் பியோனா Mcilwham ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்