ஹரி - மேகன் தொடர்பில் முக்கிய முடிவை எடுத்த ராணியார்: வெளியானது உத்தியோகப்பூர்வ ஆணை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரச பொறுக்குகளில் இருந்து விலகிக்கொள்ளும் முடிவுக்கு பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் ஒப்புதல் அளித்து வரலாற்று சிறப்புமிக்க முடிவை எடுத்துள்ளார்.

இளவரசர் ஹரியும் மனைவி மேகனும் தங்களின் எதிர்கால வாழ்க்கையை தனியே கட்டமைத்துக் கொள்ளவும் ராணியார் அனுமதி வழங்கியுள்ளார்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் ஒப்பந்தம் ஒன்றை அமைத்துக் கொள்ளவும், அடுத்த சில நாட்களில் இந்த ஒப்பந்தமானது இறுதி வடிவம் பெறும் எனவும் அரண்மனையில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அரண்மனை கடமைகளை விட்டு விலகுவதற்கான இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியரின் முடிவில் ராணியார் தமது ஆழ்ந்த ஏமாற்றத்தையும் பதிவு செய்துள்ளார்.

ராணியார் மற்றும் இளவரசர்கள் சார்லஸ், வில்லியம், ஹரி ஆகியோருக்கு இடையில் சாண்ட்ரிங்ஹாமில் நடந்த முக்கிய கலந்தாலோசனைகளுக்குப் பிறகு பிரித்தானிய வரலாற்றில் முன்னோடியில்லாத அறிக்கை ஒன்றை அரண்மனை வட்டாரங்கள் வெளியிட்டுள்ளது.

இந்த கலந்தாலோசனை கூட்டத்திற்கு மேகன் மெர்க்கல் கனடாவிலிருந்து கலந்து கொண்டதாக நம்பப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பில் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹரி மற்றும் மேகன் தம்பதியின் முடிவை தமது குடும்பமானது முழு மனதுடன் ஏற்றுக் கொள்வதாகவும்,

ஒரு குடும்பமாக இன்னும் சுதந்திரமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற அவர்களின் விருப்பத்தை நாங்கள் மதிக்கிறோம், புரிந்துகொள்கிறோம் என குறிப்பிட்டுள்ள ராணியார், அதே வேளையில் தங்கள் குடும்பத்தில் மதிப்புமிக்க உறுப்பினர்களாகவே அவர்கள் தொடர்வார்கள் எனவும் தெளிவுப்படுத்தியுள்ளார்.

ஹரி மற்றும் மேகன் தங்கள் புதிய வாழ்க்கையில் பொதுமக்கள் வரிப்பணத்தை நம்ப விரும்புவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

அரண்மனையின் முக்கிய பொறுப்புகளில் இருந்து அவர்கள் விடுபட்டுக்கொள்ளும் இந்த காலகட்டத்தில் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதி கனடாவிலும், இங்கிலாந்திலும் நேரத்தை செலவிடுவார்கள் என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

எனது குடும்பத்தினருக்குத் தீர்க்க வேண்டிய சிக்கலான விஷயங்கள் இவை என குறிப்பிட்டுள்ள ராணியார், இன்னும் சில பணிகள் செய்யப்பட உள்ளது எனவும், ஆனால் வரவிருக்கும் நாட்களில் இறுதி முடிவுகளை எட்டுமாறு கேட்டுக்கொள்வதாகவும் ராணியார் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்