எங்களுக்குள் பிரிவு என வெளியான செய்திகள் வேதனையளிக்கின்றன: பிரித்தானிய இளவரசர்கள்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

இளவரசர் வில்லியம் ஹாரிக்கு தொல்லை கொடுத்ததால்தான் சகோதரர்கள் இருவரும் பிரிந்ததாக வெளியான செய்திகள் வேதனையளிப்பதாக பிரித்தானிய இளவரசர் வில்லியமும் ஹரியும் இணைந்து தெரிவித்துள்ளார்கள்.

அந்த செய்தி தங்களை மிகவும் கவலையடையச் செய்வதாக அவர்கள் இருவரும் சேர்ந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இளவரசர் ஹாரி தனது அண்ணனால் ஒதுக்கப்பட்டதாக உணர்வதாக அரண்மனை வட்டாரத்திலுள்ள ஒருவர் தெரிவித்திருந்தார்.

ஆனால், ஹாரி தனது அண்ணன் வில்லியமுடன் சேர்ந்து கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இளவரசர் வில்லியம் மற்றும் இளவரசர் ஹாரிக்கு இடையிலான உறவு குறித்து ஒரு பொய்யான செய்தி பிரித்தானிய செய்தித்தாள் ஒன்றில் இன்று வெளியாகியுள்ளது.

PA:Press Association

அப்படி ஒன்றும் இல்லையென தெளிவாக மறுக்கப்பட நிலையிலும் அந்த பொய்யான செய்தி வெளியாகியுள்ளது.

மன நலம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து அதிகம் கவனம் செலுத்தும் சகோதரர்களுக்கு, மனதை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த செய்தி மிகவும் வேதனையளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Credit: Getty - Contributor

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்