அத்துமீறிய ஈரானுக்கு பதிலடி..! பிரித்தானியா அதிரடி நடவடிக்கை

Report Print Basu in பிரித்தானியா

ஈரானுக்கான பிரித்தானியா தூதர் ராப் மெக்கைர் கைது செய்யப்பட்ட நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் போரிஸ் ஜான்சன் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஈரானில், உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றதற்காக பிரித்தானியா தூதர் ராப் மெக்கைர் கைது செய்யப்பட்டார்.

இதற்கு பிரித்தானியா கடும் கண்டனம் தெரிவித்தது. பிரான்ஸ், ஜேர்மனி, அமெரிக்கா உட்பட பல நாடுகளும் ஈரானின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்நிலையில், தெஹ்ரானில் உள்ள பிரித்தானியா தூதரை ஏற்றுக்கொள்ள முடியாத வகையில் கைது செய்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரித்தானியாவுக்கான ஈரானின் தூதருக்கு அந்நாட்டு வெளியுறவு அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது.

பிரதமர் போரிஸ் ஜான்சனின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது, பிரித்தானியா தூதர் கைது குறித்து அரசாங்கம் தனது ‘வலுவான ஆட்சேபனைகளை’ தெரிவிக்கும், இது தூதரக நெறிமுறையின் ‘ஏற்றுக்கொள்ள முடியாத மீறல்’ என்று கூறினார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்