தப்பித்தல்; நட்பு; தனித்த முடிவுகள்! ஹாரி மேகன் வட அமெரிக்கப் பின்னணி

Report Print Abisha in பிரித்தானியா

ஹாரி, மேகன் மூத்த அரசு பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், இதற்கு குறிப்பிட்டவை எல்லாம் காரணமாக இருக்கலாம் என்று விமசகர்கள் கூறியுள்ளனர்.

பிரித்தானிய இளவரசர் ஹாரி மற்று அவரது மனைவி மேகன் மூத்த அரசியல் உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தனர். இது பிரித்தானியா முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதிலும் குறிப்பாக தங்களுக்க சுதந்திரம் தேவைப்படுவதால் அரச குடும்பத்திலிருந்து விலகி வட அமெரிக்காவுக்கு செல்லவுள்ளதாவும் பிரித்தானிய ராணி மற்றும் அரசுக்குத் தாங்கள் எப்போதும் உதவியாக இருப்போம் என்று கூறியுள்ளனர்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பான ஆலோசனை கூட்டம் இன்றைய பக்கிங்காம் அரண்மனையில் மகாராணியார் முன்னிலையில் நடக்கவுள்ளது.

இதில் ராணி எலிசபெத், ஹாரியின் தந்தை சார்லஸ், சகோதரர் வில்லியம்ஸ், இளவரசர் ஹாரி உட்பட ராஜ குடும்பத்தைச் சேர்ந்த பல மூத்த மற்றும் முக்கிய உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரித்தானிய அரச குடும்பத்தில் இருந்து யாரும் இருவரை விலகியதில்லை. ஆனால், முதல் முறையாக ஹரி மேகன் தம்பதியினர் அறிவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

அவர்கள் வெளியேற பல காரணங்கள் கூறப்பட்டாலும் அவர்களது தனிப்பட்ட சுதந்திரமும் ஊடகங்களின் வெளிச்சத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்பதே முதன்மையானதாக உள்ளது.

அரச குடும்பத்தில் இருப்பதால், தங்களின் சுதந்திரம் மறுக்கப்படுவதாகவும் தனிப்பட்ட விஷயங்கள் வெளியில் கசிந்துவிடுவதாகவும் ஹாரி நினைப்பதாக அவரது நெருங்கிய நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், உண்மையான காரணங்கள் என்ன என்பது இதுவரை வெளியாகவில்லை.

அரச குடும்பத்தை விட்டு வெளியேறும் ஹாரி-மேகன் தம்பதி தங்களின் மீதி வாழ்நாளைக் கனடாவில் கழிக்கவுள்ளதாகவும் யூகங்கள் தெரிவிக்கின்றன. ஏனெனில், இன்று ராணியுடன் ஆலோசனையில் ஈடுபட ஹாரி பிரித்தானிய வருகை தந்துள்ள நிலையில் மேகன் மற்றும் குழந்தை ஆர்ச்சி கனடாவிலேயே தங்கியுள்ளனர்.

மேலும், மேகனின் தோழி ஜெசிகா முல்ரோனி தன் கணவர் பென் முல்ரோனியுடன் கனடாவின் டொரொண்டோவில் வசித்து வருகிறார். பென் முல்ரோனி கனடா நாட்டின் முன்னாள் பிரதமரின் மகன் ஆவார். எனவே அவர்கள், ஹாரி மேகனுக்கு உதவுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அங்கு அவர்களுக்கு தனியுரிமை மற்றும் ஊடகங்கள் அவர்களை பெரிதாக விமர்சிக்காது. எனவே இது ஊடக வெளிச்சத்திலிருந்து விலகி இருக்க நல்லவழி என்று அவர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது இல்லாமல் இளவரசி மேகனுக்கும் கனடாவுக்கும் சிறுவயதிலிருந்தே நெருங்கிய நட்பு உள்ளது. திருமணத்துக்குப் பிறகு இந்த ஜோடி தங்களின் விடுமுறை நாள்களில் பாதியைக் கனடாவிலேயே கழித்துள்ளனர். கடந்த கிறிஸ்துமஸ் பண்டிகையையும் இவர்கள் அரச வழக்கப்படி கொண்டாடாமல் அப்போதும் கனடாவில் தனியாகக் கொண்டாடியுள்ளனர். தற்போது ஹாரி அரசக் குடும்பத்தை விட்டு வெளியேற இதுவும் ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.

விரைவில் அமெரிக்க பொது தேர்தல் வரும் நிலையில், டிரம்பின் ஆட்சி மீண்டும் அமையவில்லை என்றால் மேகனின் சொந்த நாடான அமெரிக்காவுக்கு இருவரும் சென்றுவிடுவார்கள் என்று தற்போது கூறப்பட்டு வருகின்றது.

எதுவாக இருந்தாலும் பேச்சுவார்த்தைக்கு பின் மட்டுமே முழு தகவல்களும் தெரியவரும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்