பிரித்தானிய இளவரசர் ஹரி மேகனுக்கு சமூக ஊடகங்களில் பெருகும் ஆதரவு!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் அறிவித்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு சமூக ஊடகங்களில் ஆதரவு பெருகியுள்ளது தெரியவந்துள்ளது.

இன்ஸ்டாகிராமைப் பொருத்தவரையில், அவர்கள் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்து நான்கே நாட்களில் புதிதாக 500,000 பேர், ஹரி மேகனை பின்தொடர தொடங்கியுள்ளார்கள்.

10 மில்லியன் பின்தொடர்வோருடன் இளவரசர் ஹரியும் மேகனும் புத்தாண்டைக் கொண்டாடிய நிலையில், அடுத்த ஒரே வாரத்தில் மேலும் 100,000 பேர் அவர்களை புதிதாக பின்தொடர தொடங்கினார்கள்.

ஆனால், அவர்கள் மூத்த ராஜ குடும்ப உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததும் அவர்களுக்கு இருந்த ஆதரவு இன்னும் அதிகமாகியுள்ளது.

அடுத்த நான்கே நாட்களில் புதிதாக 500,000 பேர் ஹரி மேகனை புதிதாக பின்தொடர தொடங்கினார்கள்.

அதாவது, 10.8 மில்லியன் பின்தொடர்வோரைக் கொண்ட இளவரசர் வில்லியம், கேட் தம்பதியரை விட, தற்போது ஹரி மேகன் தம்பதியர் வெறும் 200,000 பின்தொடர்வோரை மட்டுமே குறைவாக கொண்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்