பிரித்தானியாவில் 160,000 பேர் மரணமடைவார்கள்... இதை கவனிக்க தவறினால்? அதிர்ச்சி தரும் தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் மாசுகாட்டுபாட்டை கையாள அரசாங்கம் அவசர நடவடிக்கை எடுக்காவிட்டால், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக அடுத்த பத்து ஆண்டுகளில் இறப்பு 50 சதவீதம் உயரும் என்று மருத்துவர் எச்சரித்துள்ளார்.

பிரித்தானியாவில் தற்போது இருக்கும் காற்றின் தரம் குறித்து அரசாங்கம் உரிய ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடுமையான விதிகளை அரசு அமல்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்திற்கு கோரிக்கை வந்து கொண்டே இருப்பதாகவும், இந்த மாற்றத்தை கோரி மக்கள் தங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பேசும் படி கோரிக்கை வைக்கப்படுகிறது.

இது ஒரு பொது சுகாதார அவசர நிலை என்று British Heart Foundation-ஐ சேர்ந்த Jacob West எச்சரித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு நாளும், நாடு முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் நச்சு துகள்களை சுவாசிக்கிறார்கள். நாட்டின் ஆரோக்கியத்தை பாதுகாக்க, கடுமையான விதிகளை கொண்டு வர வேண்டும், நாம் அதை உறுதி செய்ய வேண்டும், இது ஆபத்து என்று எச்சரித்துள்ளார்.

Picture: Shutterstock

வெளியேறும் புகை, மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை ஆகியவற்றில் இருந்து PM2.5 என்ற துகள் இருப்பதாகவும், இதை நாம் சுவாசிக்கும் போது நச்சுத்தன்மையடையக்கூடும், ஒவ்வொரு ஆண்டும் இங்கிலாந்தில் 11,000 பேர் இதயம் மற்றும் மாசுபாட்டால் இறந்து கொண்டிருக்கிறார்கள், காற்றின் தரத்தை நாம் மேம்படுத்தாவிட்டால் இது ஆண்டிற்கு 16,000 ஆக உயரும் என்று கூறப்படுகிறது.

காற்று மாசுபாடு நிபுணர் டாக்டர் மார்க் மில்லர் கூறுகையில், காற்று மாசுபாடு என்பது நம் அனைவரையும் பாதிக்கும் ஒரு தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சனை, காற்று மாசுபாடு நமது இரத்த நாளங்களை சேதப்படுத்துகிறது, இரத்த உறைவு ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

Picture: Rex Features

இதனால் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவது ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காற்று மாசு வெளிப்பாட்டின் பாதுகாப்பான நிலை இல்லை என்றாலும், கடுமையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவது நமது ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பெரிதும் உதவும், மக்கள் நீண்ட காலமாக வாழ முடியும் என்று கூறியுள்ளார்.

Picture: Getty

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்