வெளிநாட்டில் புது வாழ்வை துவக்குவதற்காக சென்ற பிரித்தானிய இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

அவுஸ்திரேலியாவில் புது வாழ்வை துவக்குவதற்காக சென்ற பிரித்தானிய இளம்பெண் ஒருவர், செல்பி எடுப்பதற்கு புகழ் பெற்ற சுற்றுலாத்தலம் ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற Madalyn Davis (21), அங்கேயே ஒரு புது வாழ்வை துவக்க முடிவு செய்துள்ளார்.

சுமார் ஒரு மாதம் அவுஸ்திரேலியாவில் செலவிட்டிருந்த நிலையில், சிட்னியில் உள்ள ஒரு இடத்திற்கு சூரியோதயத்தைக் காண்பதற்காக ஏழு நண்பர்களுடன் சென்றுள்ளார் அவர்.

Diamond Bay என்ற இடத்திற்கு சென்ற நண்பர்கள், பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த வேலியைத் தாண்டிச் சென்று, மலை முகட்டின் விளிம்பில் அமர்ந்திருக்கிறார்கள்.

அதிகாலை 6.30க்கு சூரியோதயத்தை பார்ப்பது அவர்கள் திட்டம். ஆனால், எதிர்பாராதவிதமாக Madalyn அந்த மலை முகட்டின் விளிம்பிலிருந்து தவறி விழுந்திருக்கிறார்.

மகளிடமிருந்து எந்த தகவலும் வராததால் கவலையடைந்த Madalynஇன் தாய், ஒன்லைனில், யாராவது Madalynஐப் பார்த்தீர்களா? அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை, அவளுடன் இருந்த யாராவது தகவல் கொடுங்கள் என்று கேட்டிருக்கிறார்.

பின்னர், Madalyn உயிரிழந்த தகவல் கிடைத்ததும், இன்று காலை, Madalynஇன் உறவினர் ஒருவர், அவர் இறந்துவிட்டது உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்ததுடன், அவருக்கு இரங்கல் தெரிவித்தவர்களுக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்