இளவரசர் ஹாரி- மேகன் விவகாரத்தில் இன்று முக்கிய முடிவு: ஒட்டு மொத்த எதிர்பார்ப்பில் பிரித்தானியா மக்கள்

Report Print Santhan in பிரித்தானியா

அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினர்கள் பதவியில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹரி-மேன் அறிவித்துள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ளதால், இன்று மகாராணி முக்கிய முடிவு எடுக்கவுள்ளதால், பிரித்தானியா மக்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பு நிலவியுள்ளது.

பிரித்தானியாவின் அரச குடும்பத்தின் முதன்மை உறுப்பினா்கள் என்ற அந்தஸ்தைக் கைவிடுவதாக இளவரசா் ஹாரியும், அவரது மனைவியான மேகன் மாா்க்கலும் அறிவித்தது, அரச குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மகாராணியிடம் கூட விவாதிக்காமல், ஹாரி இப்படி ஒரு முடிவு எடுத்துவுட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து விவாதிப்பதற்காக அரச குடும்பத்து உறுப்பினா்களை மகாராணி எலிசபெத் அவசரமாக அழைப்பு விடுத்திருந்தார்.

இதற்கான கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், இனி அரண்மனை நிகழ்வுகளில் ஹாரிக்கும், மேகனுக்கும் எத்தகைய பங்கு அளிப்பது என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அவர்கள் விலகுவதாக அறிவித்திருந்தாலும், மகாராணிக்கு இதில் உடன்பாடில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் இன்றைய கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு என்ன என்பது அரச குடும்பத்தினரிடையே மட்டுமின்றி, பிரித்தானிய மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்