அந்த ஒற்றைப் புகைப்படம்: அரச குடும்பத்தில் இருந்து விலகிய பிரித்தானிய இளவரசர் ஹரி

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானிய அரச குடும்பம் புதிய தசாப்தத்தின் முதல் புகைப்படமாக பதிவு செய்த அந்த ஒற்றைப் புகைப்படமே, இளவரசர் ஹரியை இந்த அதிர்ச்சி முடிவுக்குத் தள்ள காரணமாக அமைந்திருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

புதிய தசாப்தத்தின் முதல் புகைப்படமாக பிரித்தானிய அரச குடும்பம் வெளியிட்ட புகைப்படம் ஒன்று, அப்போதே அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

குறித்த புகைப்படத்தில் 93 வயதான ராணியாருடன், அவரது மகனும் அடுத்த கிரீட அவகாசியுமான சார்லஸ், அவரது மகன் வில்லியம், மற்றும் இவரது மகன் குட்டி இளவரசர் ஜார்ஜ் என நால்வரும் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி பதிவு செய்யப்பட்டுள்ள இந்த புகைப்படத்தில் இளவரசர் ஹரி இடம்பெறவில்லை.

ஆனால் இதே காலகட்டத்தில் அவர் தமது காதல் மனைவியுடன் கனடாவுக்கு சென்றிருந்தார்.

பிரித்தானிய அரச குடும்பத்தால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ள குறித்த புகைப்படமானது, இளவரசர் ஹரியை மனதளவில் கடுமையாக பாதித்திருக்கலாம் எனவும்,

ஒரு காலத்தில் இணைபிரியாத சகோதரர்கள் என அறியப்பட்ட வில்லியமும் ஹரியும் மீண்டும் இணைய முடியாதபடி விலகிச் செல்ல காரணமாக அமைந்திருக்கலாம் எனவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

மட்டுமின்றி, இளவரசர் ஹரியை பிரித்தானிய அரச குடும்பம் திட்டமிட்டே வெளியே அனுப்புகிறது என உறுதிபட கூற முடியாது என்றாலும், வாரீசு அரசியலில் எப்போதும் இளவரசர் ஹரி கவனம் செலுத்தியது இல்லை எனவும் ஆய்வாளரான Chris Ship சுட்டிக்காட்டுகிறார்.

பிரித்தானிய அரச குடும்பம் இளவரசர் ஹரியை தவிர்த்து அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியிடுவது இது முதன்முறை அல்ல.

ராணியாரின் 90-வது பிறந்தநாளை முன்னிட்டு 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட புகைப்படத்திலும் இளவரசர் ஹரியின் பங்களிப்பு இல்லை.

குறித்த புகைப்படமானது பின்னர் நினைவு முத்திரையாக அரசு சார்பில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்