துரதிஷ்டவசமாக ஈரான் விமான விபத்தில் இறந்த பிரித்தானிய புதுமணத்தம்பதி! கடைசியாக பேசிய வார்த்தைகள்

Report Print Raju Raju in பிரித்தானியா

ஈரான் விமான விபத்தில் பிரித்தானிய புதுமணத்தம்பதி உயிரிழந்த நிலையில் அவர்களின் மொத்த குடும்பமும் உயிர் பிழைத்ததும், துரதிஷ்டவசத்தால் தம்பதியின் உயிர் பறிபோனதும் தெரியவந்துள்ளது.

ஈரான் தலைநகர் Tehran-ல் உள்ள விமான நிலையத்தில் இருந்து நேற்று 176 பயணிகளுடன் கிளம்பிய விமானம் சிறிது நேரத்தில் வெடித்து சிதறியது.

இதில் விமானத்தில் இருந்த அனைவரும் உயிரிழந்தனர்.

இந்த விபத்தில் பிரித்தானியாவை சேர்ந்த புதுமணத்தம்பதிகள் Saeed Tahmasebi மற்றும் Niloofar Ebrahim ஆகியோரும் இறந்தனர்.

கடந்த மாதம் இருவருக்கும் லண்டனில் திருமணம் நடந்த நிலையில் சடங்கு ஒன்றுக்காக தங்கள் சொந்த நாடான ஈரானுக்கு இருவரும் குடும்பத்தினருடன் சென்றிருந்தனர்.

Instagram

சடங்கு முடிந்ததும் குடும்பத்தினர் பிரித்தானியாவுக்கு திரும்பி விட்டனர்.

ஆனால் Saeed Tahmasebi மற்றும் Niloofar Ebrahim ஆகிய இருவர் மட்டும் ஈரானில் இருந்தனர்.

இதற்கு காரணம் அவர்களின் திருமண போட்டோக்களை பெற்று கொண்டு பிரித்தானியா திரும்ப இருவரும் முடிவெடுத்தனர், அதன்படி நேற்று கிளம்பிய போதே விமான விபத்தில் உயிரிழந்தனர்.

இந்த தம்பதியுடன் குடும்பத்தாரும் ஈரானில் தொடர்ந்து தங்கியிருந்து நேற்று கிளம்பியிருந்தால் அவர்களும் விபத்தில் சிக்கியிருக்க கூடும்.

ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர்கள் முன்னரே திரும்பிவிட்டனர்.

இது குறித்து Saeed Tahmasebi-ன் உறவினர் Amir கூறுகையில், நாங்கள் அனைவரும் பிரித்தானியாவுக்கு வந்துவிட்ட நிலையில் ஈரானில் ஏற்பட்ட பதற்றமான சூழல் எங்களுக்கு Saeed Tahmasebi மற்றும் Niloofar Ebrahim ஆகியோரை பற்றி கவலையை கொடுத்தது.

குறித்த விமானத்தில் ஏறுவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்னர் இருவரும் என்னிடம் போனில் பேசினார்கள், அப்போது எந்த பிரச்சனையும் இல்லை, அனைத்தும் நலம் என கூறினார்கள்.

ஆனால் பின்னர் இந்த சோகமான சம்பவம் நடந்துவிட்டது, அவர்களின் பிரிவால் எங்கள் இதயம் நொறுங்கிவிட்டது என கூறியுள்ளார்.

Instagram

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்