ராஜ குடும்பத்தினரை கலந்தாலோசிக்காமல் இளவரசர் ஹரி எடுத்த முடிவு: கடும் கோபத்தில் மகாராணியார்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

ராஜ குடும்பத்திலிருந்து விலகுவதாக நேற்றிரவு பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவர் மனைவி மேகனும் வெளியிட்ட அறிவிப்பு ஏற்படுத்திய பரபரப்பு அடங்குவதற்குள், அவர்கள் ராஜ குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களிடம் கலந்தாலோசிக்காமலே இந்த முடிவை எடுத்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

நேற்றிரவு பிரித்தானிய இளவரசர் ஹரியும் மேகனும், தாங்கள் ராஜ குடும்பத்தின் முன்னணி உறுப்பினர்கள் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள்.

தற்போது, அவர்கள் மகாராணியாரிடம் கூட இந்த விடயம் குறித்து கலந்தாலோசிக்காமலேயே முடிவு எடுத்துள்ளதாகவும், அதனால் அவர் கடுங்கோபத்திலிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மகாராணியார் மட்டுமின்றி, தனது தந்தை சார்லஸ், அண்ணன் வில்லியம் என யாரிடமும் எதுவுமே கூறாமல் ஹரி இந்த முடிவை எடுத்துள்ளார்.

அது மட்டுமின்றி, அவர் ராஜ குடும்பத்திலிருந்து விலகுவதாக அறிவித்த விடயத்தை, தொலைக்காட்சியைப் பார்த்துதான் மற்ற ராஜ குடும்பத்தினர் தெரிந்துகொண்டுள்ளார்கள்.

இதனால் ராஜ குடும்பத்தினர் கடுமையான ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ள மூத்த அலுவலர் ஒருவர், அரண்மனை வட்டாரம் அதிர்ச்சியும் பயங்கர கோபமும் அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

ராஜ அரண்மனையில் மக்கள் அவர்களுக்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தார்கள்.

அவர்கள் விரும்பியபடி திருமணம், அவர்கள் விரும்பிய வீடு, அவர்கள் கேட்ட அலுவலகம், அவர்களுக்கு தேவையான பணம், அவர்கள் கேட்டபடி உதவியாளர்கள், அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு சுற்றுலா என்று மொத்த ராஜ குடும்பமும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தது.

இதற்குமேல் என்ன வேண்டும் என்கிறார் கடும் வெறுப்படைந்துள்ள ஒரு அலுவலர். மற்றொரு அலுவலர், மகாரணியாரை இப்படி நடத்தியது பெரிய அநியாயம், ஹரி தம்பதி வித்தியாசமாக ஒன்றை செய்ய விரும்புகிறார்கள் என்பதை அவரது குடும்பத்தினர் புரிந்துகொண்டிருந்தார்கள், அவர்களுக்கு உதவவும் தயாராக இருந்தார்கள்.

அப்படியிருக்கும் நிலையில் ஹரியும் மேகனும் இப்படி செய்தது அவர்கள் அனைவரையும் கடும் ஏமாற்றத்திற்குள்ளாக்கியுள்ளது என்கிறார்.

ஹரி, மேகனின் அறிவிப்பைத் தொடர்ந்து அரண்மனை வட்டாரமும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், இளவரசர் ஹரி மற்றும் மேகனுடன் துவக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தைகள் இப்போதுதான் ஆரம்பகட்டத்தில் உள்ளன.

அவர்கள் வித்தியாசமான ஒரு அணுகுமுறையை தேர்ந்தெடுக்க விரும்புவது புரிகிறது. ஆனால், அவை மிகவும் குழப்பமான பிரச்சனைகள், அவற்றை செயல்படுத்த காலம் செல்லும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்