லண்டனில் குழந்தை கண்முன்னர் தாய்க்கு நேர்ந்த கதி! அவர் மாமனார் வெளியிட்டுள்ள தகவல்

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் குழந்தை கண்முன்னால் தாய் மூன்று முறை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு லண்டனை சேர்ந்தவர் Josephine Conlon (36). இவர் Streatham Hill பகுதியில் இரு தினங்களுக்கு முன்னர் தனது குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார்.

கைவண்டியில் தனது குழந்தையை அமர வைத்து அதை தள்ளி கொண்டு Josephine சென்றார்.

அப்போது அவர் பின்னால் வந்த மர்ம நபர் குழந்தை கண் எதிரில் Josephine-ஐ மூன்று முறை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளான்.

பின்னர் வலியால் துடித்த Josephine மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

Josephine உயிருக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை எனவும், அவர் நலமாக உள்ளதாகவும் அவரின் மாமனார் கூறியுள்ளார்.

இதனிடையில் அவரை கத்தியால் குத்தி நபர் 6 அடி உயரத்தில் கருப்பு நிறத்தில் இருந்ததாக தெரியவந்துள்ளது.

பொலிசார் கூறுகையில், சம்பவம் தொடர்பில் விசாரித்து வருகிறோம், தடயவியல் நிபுணர்கள் சிசிடிவி காட்சிகள் மற்றும் இன்னும் சில ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.

இது தொடர்பில் யாரும் இன்னும் கைது செய்யப்படவில்லை என கூறியுள்ளனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட Josephine-ன் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...