இந்தியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட பிரித்தானிய இளவரசியின் தோழி: நீதி தாமதமாவதால் ஏமாற்றத்தில் பெற்றோர்!

Report Print Balamanuvelan in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசி ஒருவரின் தோழி ஒருவர் இந்தியாவில் கொடூரமாக கொல்லப்பட்ட வழக்கில் இதுவரை நீதி கிடைக்காததால் அவரது குடும்பத்தார் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பிரித்தானிய இளவரசி பீட்ரிஸின் பள்ளித்தோழி Sarah Groves (24). அவர் இந்தியாவுக்கு சுற்றுலா சென்றிருந்தபோது, அவரது புதுக்காதலரால் 40 முறை குத்திக்கொல்லப்பட்டார்.

பிரித்தானியரான Sarah, இந்தியாவுக்கு சுற்றுலா வந்திருந்த போது, நெதர்லாந்தைச் சேர்ந்த Richard de Wit என்பவரை கோவாவில் சந்தித்து காதலிக்கத் தொடங்கியுள்ளார்.

பின்னர் காஷ்மீருக்கு Richard குடும்பத்துடன் சென்ற Sarah, அவருடன் படகு வீடு ஒன்றில் தங்கியிருந்தபோது குத்திக்கொல்லப்பட்டார். இது நடந்தது 2013ஆம் ஏப்ரல் மாதம்.

கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் சென்று நீதிமன்றத்தில் சுமார் 200 விசாரணைகளுக்குப் பிறகும் இதுவரை வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. Richard மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

அடுத்த விசாரணை இம்மாத (ஜனவரி) மத்தியில் காஷ்மீரில் நடைபெற இருக்கும் நிலையில், இன்னமும் தங்களுக்கு நீதி கிடைக்காததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர் Sarahவின் பெற்றோர்.

Guernseyயில் வாழும் Sarahவின் தந்தை Groves, தங்கள் குடும்பத்தின் மீது இந்திய அதிகாரிகளுக்கு எந்த மரியாதையும் இல்லை என குற்றம் சாட்டியுள்ளார்.

இப்படி கோரமாக கொல்லப்பட்ட ஒரு உயிருக்கு மரியாதை கிடையாதா என அங்கலாய்க்கிறார் Groves.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...