பிரித்தானியாவில் வீட்டினுள் மர்மமாக இறந்து கிடந்த ஆண்-பெண்! பக்கத்து வீட்டு நபர் சொன்ன தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் வீட்டினுள் ஆண் மற்றும் பெண் இரண்டு பேர் இடந்து இடந்ததால், இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பிரித்தானியாவின் தெற்கு வேல்சில் Llanelli-வில் இருக்கும் வீட்டினுள் ஆண் மற்றும் பெண் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக, கடந்த 29-ஆம் திகதி பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த பொலிசார் அவர்கள் இரண்டு பேரில் ஆணின் வயது 58 இருக்கும் எனவும் பெண்ணின் வயது 46 இருக்கும் என்று தெரிவித்துள்ளனர்.

எந்த ஒரு அடையாளமும் இல்லாமல் இறந்து கிடப்பதால் இது தற்கொலையா? இல்லைகொலையா? தற்கொலையா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

(Image: Adrian White/Media Wales)

மேலும் அருகில் வசிக்கு சுமார் 50-வது மதிக்கத்தக்க நபர் கூறுகையில், கடந்த சில தினங்களாகவே வீட்டின் கதவு மூடி இருந்ததல், ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர்ந்தே என்று கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்