பிரித்தானியாவை விட்டு வெளியேறும் இஸ்லாமியர்கள்... என்ன காரணம்? அவர்களே சொன்ன தகவல்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா பாராளுமன்ற தேர்தலில் போரிஸ் ஜான்சனின் மாபெரும் வெற்றிக்கு பின், அங்கிருக்கும் பிரித்தானியா இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்த தேர்தலில் கன்சர்வெடிவ் கட்சி வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றிக்கு பின் பிரித்தானியா இஸ்லாமியர்கள் நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக, பிரபல ஆங்கில ஊடகமான மெட்ரோ யூகே செய்தி வெளியிட்டுள்ளது.

(Picture: PA)

அதில், இஸ்லாமிய தொண்டு நிறுவனத்தின் தலைவரான Manzoor Ali, இந்த தேர்தலின் வெற்றிக்கு பின் பயத்தில் இருப்பதாகவும், தன்னுடைய குழந்தைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

அவர் தொடர்ந்து கூறுகையில், என்னுடைய பாதுகாப்பை நினைத்தால் பயமாக இருக்கிறது, அதோடு என்னுடைய குழந்தைகளின் எதிர்காலமும் சேர்த்து தான், தற்போது பிரதமராகியிருக்கும் போரிஸ் பிரதமராகுவதற்கு முன், பல சர்ச்சைகளின் சிக்கியவர், அவர் இஸ்லாமியர்களை கண்டால் பயமாக இருக்கிறது என்று கூறியவர்.

Manzoor Ali/metro.co.uk

கடந்த 2005-ஆம் ஆண்டு வந்த ஒரு ஆர்டிக்களில் இஸ்லாமியர்களை கண்டால் பொதுமக்கள் பயப்படுவதாக குறிப்பிட்டிருந்தார். அதோடு மட்டுமின்றி கடந்த ஆண்டு டெலிகிராப்பில், இஸ்லாமிய பெண்கள் வங்கிதிருடர்கள் என்று விமர்சித்திருந்தார்.

தேர்தலின் போது இது போன்ற கருத்துக்களுக்கு கன்சர்வெடிவ் கட்சி மன்னிப்பு கேட்டிருந்தாலும் பயமாக இருக்கிறது.

கிரேட் மான்செஸ்டரில் Barakah Food Aid என்ற தொண்டு நிறுவனத்தை கடந்த 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன், இந்த தொண்டு நிறுவனம் மூலம் அனைத்து தரப்பட்ட மக்களுக்கும் உதவி வருகிறோம்.

பிரித்தானியாவை விட்டால் எனக்கு எங்கு செல்வது என்று தெரியவில்லை, குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தை பாருங்கள் என்று கூறி வருவதாக தெரிவித்துள்ளார்.

இதே போன்று லண்டனில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் Eida என்ற 38 வயது பெண்ணும், இவரைப் போன்றே பயப்படுகிறார். குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் நான் தலையில் முக்காடு போட்ட படி சென்றால் தீவிரவாதி என்று கூறுகின்றனர். தற்போது இவரின் வெற்றி மேலும் பயத்தை கொடுத்துள்ளது.

இதனால் நான் துருக்கி மற்றும் பாகிஸ்தான் போன்ற இடங்களில் வேலை தேட துவங்கியுள்ளேன், கனடாவில் இருக்கும் என்னுடைய மருமகனிடம் அங்கு இஸ்லாமியர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள், பாதுகாப்பானதா என்று கேட்டேன், அதற்கு அவர் பிரித்தானியாவை விட இங்கு ஓகே தான் என்று கூறியதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்