பிரித்தானியாவில் அதிகமுறை திருமணம் செய்து கொண்ட நபர் எடுத்த முடிவு: அவர் சொன்ன காரணம்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் அதிகமுறை திருமணம் செய்துகொண்ட நபர் தமது ஒன்பதாவது திருமண நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

லோதாரியோ ரான் ஷெப்பர்ட் என்ற அந்த 71 வயது நபர், மீண்டும் ஒரு திருமணம் நல்லதல்ல என்ற முடிவே, நிச்சயதார்த்தம் ரத்து செய்தத்ற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.

ரான் ஷெப்பர்ட் தமது ஓராண்டு கால தோழியான 30 வயது Rose Hans என்பவருக்கு கடந்த மாதம் தமது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இதுவரை நேரில் பார்த்திராத அந்த அமெரிக்க பெண்ணை, 5000 மைல்கள் தொலைவில் கானாவில் அவர் மேற்கொண்டுவரும் நர்சுகளுக்கான கல்வி முடித்த பின்னர் திருமணம் செய்து கொள்வதாக இருவரும் முடிவு செய்திருந்தனர்.

ஆனால் கடைசி நிமிடத்தில் தமது முடிவை மாற்றிக் கொண்டதாக ரான் ஷெப்பர்ட் தற்போது தெரிவித்துள்ளார்.

(Image: Rose Hans/Facebook)

கடந்த வெள்ளிக்கிழமை இருவரும் நேரிடையாக முதன்முறையாக சந்திக்க திட்டமிட்டிருந்ததாகவும்,

ஆனால் எவரையும் மனந்திறந்து காதலிக்கும் மன நிலையை கடந்த பின்னர் திருமணம் செய்து கொள்வது சரியாகபடவில்லை என தாம் கருதியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமது முடிவால் Rose Hans மன வருத்தத்தில் இருப்பதாக தெரியும் என்றாலும், தமது முடிவு உறுதியானது என ரான் தெரிவித்துள்ளார்.

மேலும், உறவுமுறை தொடர்பில் தமது அனுபவத்தை தொகுத்து ஒரு புத்தகமாக வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Image: Rowan Griffiths)

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்