துப்பாக்கியுடன் இங்கிலாந்து வீதியில் சுற்றிய நபரை சுட்டு வீழ்த்திய பொலிஸ்

Report Print Vijay Amburore in பிரித்தானியா

இங்கிலாந்து வீதியில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த நபரை பொலிஸார் துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

இங்கிலாந்தின் ஹெஸ்ல் சாலையில் துப்பாக்கியுடன் ஒரு நபர் சுற்றித்திரிவதாக வந்த தகவலைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஆயுதமேந்திய அதிகாரிகள் வரவழைக்கப்பட்டதாக ஹம்ப்சைட் பொலிஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து தலைமை கான்ஸ்டபிள் பால் ஆண்டர்சன் கூறுகையில், ஒரு நபர் கையில் துப்பாக்கியுடன் சுற்றித்திரிவதாக வந்த தகவலை அடுத்து ஆயுதமேந்திய அதிகாரிகள் அனுப்பப்பட்டனர்.

சம்பவத்தின் போது அந்த நபர் பொலிஸார் சுடப்பட்டார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளார். வேறு எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனக்கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்