மெக்கானிக் கைக்கு தவறுதலாக வந்து சேர்ந்த £193,000 பணம்! இதன் பின்னர் ஏற்பட்ட குழப்பங்கள்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் குறியீட்டு எண்ணை தவறாக கொடுத்ததால் முதியவரின் £193,000 பணம் தவறுதலாக மெக்கானிக் ஒருவரின் வங்கிக்கணக்குக்கு சென்ற நிலையில் நீதிமன்றம் மூலம் அதை அவர் மீட்டுள்ளார்.

கேம்ப்ரிட்ஜை சேர்ந்தவர் பீட்டர் டிக் (74). இவரின் தந்தை கடந்த ஏப்ரல் மாதம் இறந்த நிலையில் அவரின் பணத்தை தனது பெயரில் மாற்ற வழக்கஞரிடம் அது தொடர்பான வங்கி குறியீட்டு எண்களை கொடுத்தார் பீட்டர்.

ஆனால் அவர் குறியீட்டு எண்ணை தவறாக கொடுத்ததால் அந்த பணம் டிம் க்ரே (42) என்ற மெக்கானிக் கணக்கில் சென்றது.

ஆனால் தனது பாட்டியின் பூர்வீக சொத்தின் மூலம் தனக்கு கிடைத்த பணம் அது என டிம் நினைத்து கொண்டார்.

இதையடுத்து தவறான குறியீட்டு எண்ணை கொடுத்த அடுத்த 12 மணி நேரத்தில் குறித்த தனியார் வங்கியை பீட்டர் தொடர்பு கொண்டார்.

ஆனால் தவறுதலாக இப்படி செய்தால் அந்த பணத்தை மீண்டும் பெற முடியாது என வங்கி சார்பில் கூறப்பட்டது.

PA

இதனிடையில் ஏழ்மை நிலையில் இருந்த டிம்முக்கு அதிகளவில் பணம் கிடைத்த நிலையில் அதிலிருந்து £13,000 பணத்தை எடுத்து தனது கடன்களை அவர் அடைத்தார்.

இந்நிலையில் தான் அது தனது பணமில்லை பீட்டரின் பணம் என டிம்முக்கு தெரியவந்தது.

இதையடுத்து செலவு போக மீதியிருந்த £150,000 பணத்தை குறித்த வங்கி உதவியுடன் மீண்டும் பீட்டருக்கு அவர் தர முயல அதற்கு உதவ வங்கி மறுத்துவிட்டது.

இதனால் வெறுத்து போன பீட்டர் நீதிமன்றத்தில் இது குறித்து வழக்கு தொடர்ந்தார். சில மாதங்களாக நடந்த வழக்கில் தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அதன்படி பீட்டருக்கு, டிம் கணக்கில் இருக்கும் பணத்தை கொடுக்கவும் அதற்கு வங்கி உதவ வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆனால் டிம் £193,000 பணத்தில் செலவு போக £150,000 மட்டுமே வைத்திருந்த நிலையில் மீதி பணத்தை கொடுக்க கடன் வாங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இது குறித்து டிம் கூறுகையில், நான் பீட்டர் பணத்துக்கு ஆசைப்படவில்லை, இது போல யாருக்கும் நடக்க கூடாது. அவர் பணத்தை திருப்பி கொடுத்தது மகிழ்ச்சியளிக்கிறது என கூறியுள்ளார்.

Arthur Rank Hospice Charity

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்