தடை செய்யப்பட்ட மருந்து...மருத்துவர்களின் அலட்சியம்: பரிதாபமாக பலியான பிரித்தானிய தாயார்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியாவில் பிரபலமான மருத்துவமனை ஒன்றில் தடை செய்யப்பட்ட மருந்தால் தாயார் ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்த சம்பவம் பகீர் கிளப்பியுள்ளது.

தொடர்புடைய மருத்துவமனை நிர்வாகம் தங்கள் அலட்சியத்தை ஒப்புக்கொண்ட நிலையில், தற்போது மரணமடைந்த பெண்மணியின் குடும்பம் நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

உட்ஃபோர்ட் கிரீன், கிழக்கு லண்டன் பகுதியை சேர்ந்தவர் 54 வயதான யுவோன் ஹெவிட். கருப்பை நீக்க அறுவை சிகிச்சைக்கு பின்னர் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்துள்ளார்.

கடந்த 2015 ஏப்ரல் மாதம் அருகாமையில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இவரது வலது கருப்பை அகற்றப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அதிக ரத்தப்போக்கு ஏற்படவே அவசர பிரிவுக்கு மற்றப்பட்டார். ஆனால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக லண்டனின் பல்கலைக்கழக கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த மருத்துவமனையில் வைத்தே நர்சுகளால் தடை செய்யப்பட்ட மருந்தான lidocaine அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த யுவோனுக்கு கடந்த 2016 டிசம்பர் மாதம் வலி நிவாரணியாக lidocaine அளித்துள்ளனர்.

பல்கலைக்கழக மருத்துவமனையில் அறுவை சிகிச்சையானது வெற்றிகரமாக முடிந்துள்ளதாக கூறும் யுவோனின் கணவர்,

ஆனால் வலியால் அவர் கடுமையாக அவதிப்பட்டு வந்துள்ளார் எனவும், அனைத்தும் நலமாக முடியும் என தாம் ஆறுதல் கூறியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே யுவோனுக்கு மூளையில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதில் மொத்த குடும்பவுமே உடைந்து போயுள்ளது. தொடர்ந்து பராமரிப்பு இல்லத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் இருமுறை மாரடைப்பு ஏற்பட்டு, தொடர்ந்து உறுப்புகல் செயலிழந்து மரணமடைந்துள்ளார் யுவோன்.

இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு எதிராக யுவோன் குடும்பம் தற்போது நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்