இளவரசி டயானாவுக்கு மிகவும் பிடித்தமான உடை குறைந்த விலையில் விற்பனை!

Report Print Abisha in பிரித்தானியா

இளவரசி டயானாவுக்கு பிடித்தமான நீல வெல்வெட் ஆடை குறைந்த விலையில், ஏலம் விடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் பலரது கவனத்தை ஈர்த்தவர் இளவரசி டயானா. அவருக்கு மிகவும் பிடித்தமான ஆடையை இறப்பதற்கு முன் நிதி திரட்ட ஏலத்திற்கு கொடுத்தார்.

அப்போது ஃப்ளோரிடாவை சேர்ந்த தொழிலதிபர் மவ்ரின் டங்கெல் அந்த ஆடையை வாங்கினார். அதை அவர், 2011ம் ஆண்டு வரை வைத்திருந்தர். பின் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் பிரித்தானியாவை சேர்ந்த தொழில் அதிபர் இந்திய மதிப்பில் 2,2257,149 ரூபாய்க்கு பெற்றார்.

தற்போது ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில், டிசம்பர் 9 ஆம் திகதி நடைபெற்ற ஏலத்தில் டயானாவின் உடை ஏலம் விடபட்டது. இதில், எதிர்பார்த்த அளவு விலை செல்லவில்லை. 250,000 முதல் 350,000 பவுண்ட் வரை நிர்ணைக்கப்பட்டிருந்த நிலையில், 48,000 பவுண்ட்கள் மட்டுமே ஏலத்தில் கிடைத்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்